122 பூர்ணசந்திரோதயம்-2 சென்றார். அந்த ஸ்திரீ இன்னது என்று விவரிக்க இயலாததும் சகிக்க இயலாததுமான அபாரமான திகிலினால் நரகவேதனை அடைந்து சித்தப்பிரமை கொண்டு கலங்கித் தவித்தவளாய் நடைப்பிணம் போல மாறி அவர் இழுத்த இடத்திற்குச் சென்று கொண்டிருந்தாள். அவளது கண்களிலிருந்து கண்ணிர் தாரை தாரையாகப் பொங்கி இரண்டு கன்னங்களின் வழியாகவும் வழிந்து கொண்டிருந்தது. நெருப்புத் தணலிற்குள் புதைபட்டவள் போல, வெதும்பிய தேகமும் சஞ்சலத்தினால் உளைவுண்ட மனதுமாக நடக்க, அடுத்த நிமிஷத்தில் அவர்கள் லாந்தர் இருந்த இடத்திற்குப் போய்ச் சேர்ந்தனர். - -
அவ்விடத்தில் மரங்கள் நிரம்பவும் அடர்த்தியாக இருந்த பாகத்தில் ஒரு லாந்தர் தரையின்மீது வைக்கப்பட்டிருந்தது. கோர ரூபத்தோடு காணப்பட்ட ஒரு முரட்டு மனிதன் தனது கையில் ஒரு மண்வெட்டியை வைத்துக்கொண்டு பிரம்மாண்ட மான ஒரு குழி வெட்டிக்கொண்டிருந்தான். வியர்த்து விரு விருத்துத் தோன்றிய அவனது தேகத் தோற்றத்திலிருந்து அவன் வெகு நேரமாக நிரம்பவும் பிரயாசைப்பட்டு அவ்விடத்தில் குழி தோண்டிக் கொண்டிருக்கிறான் என்பது நன்றாகத் தெரிந்தது. பரம விகாரமாகத் தோன்றிய அந்த மனிதனையும், அவனால் தோண்டப்பட்ட குழியையும் காண, அந்த இளநங்கைக்குக் குலைநடுக்கம் உண்டாயிற்று. சகிக்க இயலாத கிலி எழுந்து அவளது உச்சி மயிரைப் பிடித்து உலுக்கியது. வியர்வை வெள்ளம் குபிரென்று கிளம்பி அக்கினிக் குழம்புபோல அவளது உடம்பு முழுவதையும் நீராட்டி வழிந்தோடியது. அவளது உயிர் விண்ணிற்கும் மண்ணிற்குமாக ஊசலாடுகிறது. அவளது மூளை குழம்பியதாகையால் அடிக்கடி மயக்கம் வந்தது. அவள் கீழே விழுந்து விடாமல் பக்கத்தில் இருந்த ஒரு மரத்தில் கையை வைத்து தன்னைச் சமாளித்துக் கொண்டாள். அவளைப் பிடித்து இழுத்துக்கொண்டு போன அந்தப் புருஷர் அங்கே குழிவெட்டிய ஆளை நோக்கி, "என்ன
பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/126
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
