பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/127

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே.துரைசாமி ஐயங்கார் 123 கட்டார் வேலை முடிந்து விட்டதா? நீ எப்போது முதல் வேலை செய்ய ஆரம்பித்தாய்?' என்றார். உடனே கட்டாரித்தேவன், 'நான் வேலை செய்ய ஆரம்பித்து சுமார் இரண்டு நாழிகை நேரம் இருக்கும். முதலில் கொஞ்சதுரம் சுக்கான்தரையாக இருந்தது. அதனால் இவ்வளவு நேரமாகி விட்டது. இது இவ்வளவு பிரயாசை கொடுக்கும் என்று நான் முதலில் நினைக்கவில்லை. அநேகமாக முடித்து விட்டேன். இன்னும் ஒர் அடி ஆழமிருந்தால், அவ்வளவே. போதுமானது. நாளைக்கு ஒருவேளை தோட்டக்காரன் வந்து சந்தேகப்பட்டுப் பார்த்தாலும் பார்ப்பான். ஆகையால், நாம் சரியான ஆழத்தில் போட்டு, மண்ணைத்தள்ளி மூடி, தரையை முன்போல சமப்படுத்தி, சருகுகளையும் சுள்ளிகளை யும் இந்தக் குழியின் மேலும் இதைச் சுற்றி வெகுதூரம் வரையிலும் போட்டு மறைத்துவிட வேண்டும். அதோ பாருங்கள் சுள்ளிகளையும் சருகுகளையும் சேர்த்து வைத்திருக்கிறேன்' என்றான். அதைக் கேட்ட அந்தப் புருஷர், சரி, நீ சொல்வதெல்லாம் நல்ல யோசனைதான்; இன்னும் ஓர் அடி ஆழம் தோண்டிவிட்டு நீ மெத்தைக்கு வா. நாங்கள் முன்னால் போய் ஆக வேண்டியதைச் செய்கிறோம்.' என்றார். கட்டாரித்தேவன், 'போங்கள். நான் இதோ வெகு சீக்கிரத்தில் வருகிறேன்' என்று கூறிவிட்டு பள்ளத்திற்குள் குனிந்து அடியிலிருந்த மண்ணை வெட்டத் தொடங்கினான். உடனே அந்தப் புருஷர் தமக்கு அருகில் மயங்கி நின்றுகொண்டிருந்த தமது மனைவியைப் பிடித்து இழுத்துக் கொண்டு அவ்விடத்தை விட்டு கட்டிடம் இருந்த இடத்தை நோக்கிச் சென்றார். ஐந்து நிமிஷ நேரத்தில் அவர்கள் இருவரும் அந்த மாளிகையின் பின் பக்கத்தை அடைந்தனர். அந்தப் புருஷர்தமது இடையில் சொருகிக் கொண்டிருந்த திறவுகோலை எடுத்து அவ்விடத்திலிருந்த ஒரு கதவைத் திறந்து தமது மனைவியின் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு