பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/134

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


130 பூர்ணசந்திரோதயம்-2 வேண்டும். அதற்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? இப்படி நீங்கள் என்னை உயிரோடு வதைப்பதைவிட, என்னுடைய உயிரை வாங்கி விடுவது நல்லது. இப்படிப்பட்ட நரக வேதனைக்கு என்னை ஆளாக்க வேண்டும் என்று நீங்கள் எத்தனை நாளாக மனதில் வைத்திருந்தீர்கள்? இந்த நடுராத்திரியில் இப்படி என்னை அழைத்துவந்து பயமுறுத்தி இந்தப் பிணத்தை எனக்குக் காட்டி என்னைச் சித்திரவதை செய்வது கொஞ்சமும் அடாது. என்னுடைய பிராணன் தானாகவே போய்விடும் போல இருக்கிறதே! ஐயோ! என்னை முதலில் வெளியில் கொண்டு போய்விட்டு விடுங்கள் என்று பிரலாபித்துக் கூக்குரலிட்டடு அழுதாள். அதைக்கண்ட அவளது புருஷர் சிறிதும் மனது இரக்க மாகிலும் அநுதாபமாகிலும் காட்டாமல் அருவருப்பும் ஆத்திரமும் அடைந்தவராய் அவளை நோக்கி, "ஒகோ இந்த மனிதர் யார் என்பது உனக்குத் தெரியாதோ! இவர் திருடுவதற்காக வந்தவரோ உண்மைதான். என்னுடைய வீட்டுக்குள் எனக்குத் தெரியாமல் பாதி ராத்திரியில் நூலேணி வழியாக ஏறிவந்து என்னுடைய சொத்தாகிய என் பெண் சாதியின் உடம்பையும் காதலையும் கற்பையும் திருட வந்த மனிதன் என்பது நிச்சயமான சங்கதி; நான் இதற்குமுன் இந்த அண்டாவைத் திறந்து இதற்குள் இருக்கும் பொருள்களை யும் மனிதனையும் ஆராய்ந்து பார்க்காமல் யூகத்தின் மேல் பேசுகிறேன் என்று எண்ணிக் கொண்டாயா? இந்த மனிதனு டைய உடம்பு அழுகி இற்றுப்போய் அடியோடு உருமாறி இருக்கிறது. ஆனாலும், இவனுடைய கைவிரலிலுள்ள முத்திரை மோதிரத்தில் இவனுடைய பெயர் செதுக்கப்பட்டி ருக்கிறது. அதைப் பார்த்தாலே இவன் திருடனல்ல என்பது நன்றாக நிச்சயமாகிறது. அதோடு இந்தப் பட்டு நூலேணியின் வழியாக ஏறிவருபவன் பெண்ணைத் திருட வருபவனே அன்றி மற்ற பொருளைத் திருட வருகிறவனல்ல. ஆகையால், நீ