பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/148

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


144 பூர்ணசந்திரோதயம்-2 சேர்த்தவர்கள் யாராக இருக்கலாம் என்பதை முன்னால் கண்டுபிடிப்பதற்காக நான் என் மூளையை வதைத்துக் கொள்வதைவிட, அதைக் கடைசியில் வைத்துக்கொண்டு திங்கட்கிழமை ராத்திரி உங்களை வழிமறித்து பலவந்தமாகக் கொண்டு போனவர்கள் யாவர் என்பதையும் அந்தப் பெண் யார் என்பதையும் முதலில் கண்டுபிடித்தால், மற்ற விஷயம் அதிலிருந்து எளிதில் விளங்கிவிடும் என்று எண்ணிக் கொண்டேன். அந்த வழிப்பறியின் விவரங்களைத் தாங்கள் அன்றையதினம் என்னிடத்தில் விவரமாகச் சொன்னபோது, அந்த விவரங்களிலிருந்து எனக்கு இரண்டு சூசனைகள் அகப்பட்டன. தங்களையும் இளவரசரையும் வழிமறித்து அழைத்துக்கொண்டு போன முரட்டு மனிதர்களில் ஒருவன் இளவரசரை மாத்திரம் தனியாக அழைத்துக்கொண்டு போய் பார்சீ ஜாதிப் பெண்ணின் இடத்தில் விட்டுவிட்டுத் திரும்பி வந்து தங்களிடம் இருந்த கடிகாரம், மோதிரங்கள், பணம், தினசரி டைரிப் புஸ்தகம் முதலிய பொருள்களை அபகரித்துக் கொண்டான் என்று சொல்லி, அவனுடைய உயரம், பருமன் முதலிய அடையாளங்களை எல்லாம் எடுத்துச் சொன்னீர்கள் அல்லவா? அதிலிருந்து எனக்கு ஒரு சந்தேகம் உண்டாயிற்று. நம்முடைய காசாநாட்டில் கட்டாரித் தேவன் என்று மாடு பிடிக்கிற கொள்ளைக்காரன் ஒருவன் இருக்கிறதாகத் தாங்கள் ஒருவேளை கேள்வியுற்றிருக்கலாம். அவன் இதுவரையில் எத்தனையோ கொள்ளைகளை நடத்தி இருந்தாலும் அவன்தான் வந்தவன் என்று சொல்லி ருஜூப்படுத்த சாட்சிகள் முன்வராமையால், அவனை நாங்கள் பிடித்துத் தண்டனைக்குக் கொண்டுவராமல் இருக்கிறோம். அவனை நான் இரண்டொரு தடவைகளில் பார்த்திருக்கிறேன். அவனுடைய அடையாளங்களுக்கும் தாங்கள் சொன்ன விவரங்களுக்கும் ஒற்றுமையாக இருந்தன. ஆகையால், அப்படித் துணிந்துவந்து வழிமறித்துத் தங்களையும் இளவரசரையும் கொண்டுபோனவன் கட்டாரித்தேவனாகத்