பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 11 வகிக்க வேண்டுமென்ற ஆசை எனக்கு நெடுநாளாக உண்டு. அதை நான்தங்களிடத்தில் எப்படி வெளியிடுவதென்று அஞ்சித் தயங்கிக் கொண்டிருந்தேன். நான் சொல்லாமலேயே அந்த விஷயம் தங்களுடைய மனசில் எப்படியோ புலப்பட்டி ருக்கிறது. கும்பிடப்போன தெய்வம் குறுக்கிடுவதுபோல அதைப் பற்றித் தாங்களே பிரஸ்தாபித்து விட்டீர்கள். அந்த விஷயத்தில் மாத்திரம் தாங்கள் என்னைக் கெளரவப் படுத்துவீர்களானால், அந்தப் பரம உபகாரத்தை நான் என்றைக்கும் மறக்கமாட்டேன். தாங்கள் எந்த விஷயத்தில் என்னிடத்தில் எப்படிப்பட்ட உதவியை நாடினாலும் நான் அதைச் செய்யத் தடையில்லை' என்று மிகவும் உருக்கமாகக் கூறி இறைஞ்சினார். அதைக் கேட்ட இளவரசர், ஒகோ! அப்படியா இந்த விஷயத்தைப்பற்றி இதுவரையில் என்னிடத்தில் ஒரு வார்த்தை சொல்லியிருந்தால், இந்நேரம் காரியம் நிறைவேறி இருக்குமே! ஆனால், அந்த மந்திரி ஒரு நச்சு மனிதன். என்னுடைய தகப்பனார் ஏதாவது உத்தரவு செய்தால், அவன் அதை மதித்து உடனே நிறைவேற்றுகிறான். நான் ஏதாவது சொல்லப் போனால், அதற்கு ஆயிரம் ஆட்சேபனைகள் சொல்ல ஆரம்பிப்பான். அவனுக்குச்சரியான மறுமொழி சொல்வது மகா கடினமான காரியம். உங்களுக்கு மகாராஜா என்ற பட்டம் கொடுக்க வேண்டுமென்று நான் அந்த மந்திரியிடம் சொன்னால், அவன் முக்கியமாக ஒர் ஆட்சேபனை சொல்லு வான். நம்முடைய ராஜ்யத்தில் உங்களுக்குச் சமமான செல்வ மும் செல்வாக்கும் கண்ணியமும் உள்ள பெரிய ஜெமீந்தார்கள் இன்னம் பலர் இருக்கிறார்கள். அவர்களும் இந்த ராஜாங்கத் துக்கு எத்தனையோ உதவிகள் பலவகையில் செய்து வருகி றார்கள். உங்களுக்கு மாத்திரம் இந்தப் பெருமையை உண்டாக்கிக் கொடுத்தால், அவர்கள் தங்களை இழிவுப் படுத்தியதாக நினைத்து மனவருத்தமும் பொறாமையும்