பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/162

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


156 பூர்ணசந்திரோதயம்-2 அவரு அப்பப்ப ராவுலே இந்தக் கூத்தாடிச்சு ஊட்டுக்கு வந்து சந்தோஷமா இருந்துப்புட்டுப் போறது வளமெ. போன சனிக்கிழமை கட்டாரித்தேவன் இங்கிட்டு வந்து ராசாமவன் கூத்தாடிச்சி ஊட்டுக்கு வாரதா யிருந்தா, ஒரு நா முன்னாடி தனக்குச் சேதி சொல்லியனுப்பச் சொல்லிப்புட்டுப் போனான். மைக்கானா, ராசமவங்க கிட்டயிருந்து சங்கதி வந்துச்சு. அவரு திங்கக்கிளமை ராவுலெ வாறேன்னு சேதி சொல்லி அனுப்பிச்சிருந்தாரு. நான் ஒடனெ எம்பொஞ்சாதியைக் காசாநாட்டுக்கு அனுப்பிச்சு சேதி சொல்லிப்புட்டு வரச்சொன்னேன். அவ போயிட்டு வந்தா. திங்கக்கிழமை ராவுலே, ராசாமவனும், மருங்காபுரி செமீந்தாரும், வந்திருந்து கூத்தடிச்சுப்புட்டு ராத்திரி ரெண்டு மணிக்குப் பொறப்பட்டுப் போனாங்க கட்டாரியும் ஆளுங்களுமா அவுங்களெவளிவறிச்சு, வண்டிக்காரனெக் கட்டிப் போட்டுட்டு, அவுங்க ரெண்டு பேரையும் வண்டியிலேயே வச்சு அளெச்சிக்கிட்டு, ஆறு மயிலு வண்டியை ஒட்டிக்கிட்டு மாரியம்மங் கோவில் இருக்குதல்ல அந்த ஊருக்குப் போனாங்களாம். அந்த ஊரு லெ செட்டித் தெருவுலே ஒரு பங்களா இருக்குதாம். அதுலே யாரோ ஒரு பெரிய மனிசரும் அவரோட பொஞ்சாதியும் இருக்காங்களாம். அவுங்களுக்கு அந்த ராசா மவனாலே என்னமோ காரியம் ஆவணுமாம். நேருலெ கேட்டா ராசாமவன் அதுக்கு ஒப்புக்க மாட்டானாம். அந்தப் பெரிய மனிசரோட பொஞ்சாதி ரதி மாதிரி நல்லா சொகுசா இருப்பாளாம். அவளுக்குப் பார்சிப் பொம்புள்ளே மாதிரி வேசம் போட்டு, அவளை ஒக்காத்திவச்சு ராசாமவனை மயக்கி, அவங்கிட்ட தந்திரமா என்னமோ எழுதி வாங்கிட்டாவளாம். கட்டாரித் தேவன் மருங்காபுரி செமீந்தாருக்கிட்ட இருந்த சொத்தையெல்லாம் புடிங்கிட்டா னாம். மறுபடி கட்டாரியும் ஆளுங்களும் அவுங்களைக் கொண்டாந்து வழிமறிச்ச எடத்துலேயே உட்டுப்புட்டு ஒடிப் பூட்டாங்க! தந்தரம் எப்படி இருக்குது பார்த்தியா? 'தந்தரம் நல்லா இருக்குது அண்ணே! கட்டாரித் தேவன் மகா