பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/197

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 185 ஏமாற்றப் போகிறோம் என்று நிரம்பவும் கவலை கொண்டு தான் நேற்று ஒன்பது மணிக்குப் புறப்பட்டேன். தெய்வம் நம்முடைய கட்சியில் இருந்து அந்தக் கிழவன் மூலமாக இந்த இடையூறைச் செய்து வைத்தது. நான் மறுபடியும் கடிதம் எழுதி அனுப்புவதாகச் சொல்லிவிட்டு வந்திருக்கிறேன். அந்தக் கடிதத்தை மிகவும் பக்குவமாகவும் தந்திரமாகவும் எழுதி இன்றையதினம் சாயுங்காலம் அனுப்பிவிட வேண்டும்' என்றாள். சாமளராவ், பூர்ணசந்திரோதயம் உன்னுடைய அபாரமான புத்திசாலித்தனத்தையும், சமயோசிதமான தந்திர ஞானத்தை யும், நான் என்னவென்று புகழுவேன் இந்த தேசத்தில் மகா புத் திசாலிகளான ஆண்பிள்ளைகள் எல்லோருடைய விவேகமும் ஒன்று சேர்ந்தால் கூட, ஒரு பெண்ணாகிய உன்னுடைய தீவிர புத்திக்கு உரை போடக் காணாது. மகா சாமர்த்தியசாலிகளான நான்கு மனிதரை நீ ஒரு நிமிஷத்தில் தோற்கடித்து அவமானப்படுத்திவிட்டாய். எவளுடைய வலையிலும் அகப்படாத இளவரசர் உன் விஷயத்தில் பைத்தியம் கொண்டு அலையும் படி செய்துவிட்டாய். நம்முடைய கருத்து இதுவரையில் நமக்க அனுகூலமாகவே முடிந்துவிட்டது. இனிமேல், அவர் உன்னுடைய வலையிலிருந்து தப்பப் போவதில்லை. நீ இன்றையதினம் கடிதத்தின் மூலமாக அவரிடம் கேட்டுக்கொள்ளும் விஷயமும் எளிதில் முடிந்துபோகும். நீ இன்னம் இரண்டொரு தினத்தில் அரண்மனையின் ஏழாவது உப்பரிகைக்குப் போய்ச் சேர்ந்து ராஜாத்தி ஆகிவிடுவாய். அதைப்பற்றிக் கொஞ்சமும் சந்தேகமே இல்லை. இப்படியெல்லாம் நடக்கும் என்று நானும் அம்மாளும் ஏற்கெனவே முடிவு கட்டிவிட்டோம். ஆனால், இவ்வளவோடு நாம் திருப்தி அடைந்து சும்மா இருந்துவிடக் கூடாது. நாம் எடுத்துக்கொண்ட காரியம் பலித்துக் கடைசி வரையில் நிலைத்து நீடித்து நிற்கவேண்டும்.