பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/23

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் . 19 விஷயத்தில் அவசியம் வெற்றி அடைவார் என்று நான் நிச்சயமாக நம்பி இருக்கிறேன்' என்றார். இளவரசர், "சரி; சந்தோஷம். எப்படியாவது பிரயத்தனம் செய்து அவளைக்கொண்டுவந்து உங்களுடைய வசப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். அதிருக்கட்டும். நாளைய தினம் உங்களுடைய முறையல்லவா! நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? பூர்ணசந்திரோதயத்தின் ஜாகைக்குப் போவீர்களா?' என்றார். மருங்காபுரி ஜெமீந்தார் மிகவும் ஏமாறிப் போன தோற்றத் தோடு விசனமாக, நான் போவதில் என்ன உபயோகம்? அவள் இனிமேல் என்னை மதிக்கப் போகிறாளா? அவளுக்கு மூலஸ்தான தெய்வத்தின் தயவு ஏற்பட்டுப்போன பிறகு மற்றச் சுற்றுக் கோவிலிலுள்ள சில்லறைத் தெய்வங்கள் எல்லாம் ஒரு பொருட்டா? நான் அவளிடம் போய் அவமானப் படுவதைவிட போகாமல் இருந்து விடுவதே உசிதம் என நினைக்கிறேன்' என்று சலிப்பாகக் கூறினார். அதைக்கேட்ட இளவரசர் சந்தோஷமாகப் புன்னகை செய்து, 'அதுதான் உத்தமமான கர்ரியம். இனிமேல் மற்றவர் அங்கே போவது வீண் பிரயாசையாகத்தான் முடியும். சரி, எனக்கு நேரமாகிறது. நான் போய் மந்திரியை வரவழைத்து, உங்களுடைய சங்கதியைச் சொல்லி, அந்தக்காரியத்தை முடிக்க வேண்டும். இன்னும் நான் அநேக கடிதங்களுக்கும், உத்தரவுகளுக்கும் கையெழுத்துச் செய்ய வேண்டும். நான் போய் விட்டு வருகிறேன்' என்று கூறி, செலவு பெற்றுக் கொண்டு அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டுத் தமது அரண் மனைக்குப் போய்ச் சேர்ந்துவிட்டார். 女 ★ ★ இனி நாம் இவர்களை விடுத்து, பூர்ணசந்திரோதயத்தைப் பற்றிப் பேசுவோம். அந்தப் பைங்கிளி இளவரசரை வெளியில்