220 பூர்ணசந்திரோதயம்-2 வேண்டும் என்ற நிச்சயம் ஏற்படத் தொடங்கியது. தங்களது விஷயத்தில் அவ்வளவு பிரயாசை எடுத்துக்கொண்டு உழைப்பவரான அவர் அன்றைய தினம் தங்களுக்கு எவ்வித அபாயமும் நேராமல் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையும் மனோதிடமும் உண்டாயின. ஆனாலும், முரட்டு மனிதர் களான கொள்ளைக்காரர்கள் எப்படிப்பட்ட பிரமாதமான ஏற்பாடுகளோடு வருவார்களோ என்றும், போலீசாரால் அவர்களை வெல்ல முடியுமோ முடியாதோ என்றும் பலவாறு எண்ணமிட்டவளா யிருந்த அன்னத்தம்மாள், மாறி மாறி இன்பமும் துன்பமும் தைரியமும் மனத்தளர்வும் அடைந்து நிரம்பவும் பரிதாபகரமான நிலைமையில் இருந்து வந்தாள்.
அவர்களது நிலைமை அங்ஙனம் இருக்க வீட்டுத் திண்ணையில் வழக்கம் போலப் படுத் திருந்த கந்தன் சரியாகப் பதினொன்றரை மணிக்கு மெதுவாக எழுந்து வாசலுக்குச்சென்றான்.தனது எஜமானியான அன்னத்தம்மாள் சகலமான ரகசியங்களையும் அறிந்து கொண்டு விட்டாள் என்பதைப் பற்றியும், போலீஸ் இன்ஸ்பெக்டர் தமது பரிவாரங் களோடு ஆயுதபாணிகளாக வந்து அதிக ஜாக் கிரதையாக திருடர்களது வருகையை எதிர்ப் பார்த்திருக்கிறார்கள் என்பதைப் பற்றியும் சிறிதும் சந்தேகியாத கந்தன் சொற்ப நேரத்தில் கட்டாரித் தேவனும், அவனது ஆட்களும் சேர்ந்து அன்னத்தம் மாளினது ஐசுவரியத்தை எல்லாம் எளிதில் அபகரித்துக் கொண்டுபோய்ப் பங்கிட்டுக்கொள்ளலாம் என்று நினைத்துக் கட்டிலடங்காக் குதூகலமும் மனவெழுச்சியும் அடைந்து, தனது கூட்டாளிகள் வந்திருக்கிறார்களோ என்று மிகுந்த ஆவலோடு அங்குமிங்கும் பார்த்துக் கொண்டு நின்றான். சரியாகப் பதினைந்து நாழிகை சமயமாயிற்று. புற்றிலிருந்து ஈசல்கள் புறப்படுவதுபோல பல முரட்டு மனிதர்கள்.அந்தத் தெருவின் பல இடங்களிலிருந்தும் தோன்றி சந்தடி செய்யாமல் நடந்து அன்னத்தம்மாளினது மாளிகை
பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/234
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
