பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/239

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் - 225 தப்பி ஓடுகிறான் என்பதைக்கண்ட போலீசார் வீராவேசம் கொண்டு மெய் மறந்து அவனைத் தொடர்ந்து ஒரே பாய்ச்சலாகப் பாய்கிறார்கள். முன்னால் ஓடிய கட்டாரித்தேவன் கொல் லைப் பக்கத்துக் கதவைத் தாண்டி வெளியில் போனவுடனே திரும்பி அந்தக் கதவை மூடி வெளிப் புறத்தில் தாளிட்டுக்கொண்டு அப்பால் ஒடிப் போய்விட்டான். அவனைத் தொடர்ந்து ஓடி வந்த போலீசார் கதவு வெளிப்பக்கத்தில் தாளிடப்பட்டுப் போனதைக் கண்டு அதோடு தளர்வடையாமல் உடனே திரும்பி வந்து, சிறிது தூரத்தில் காணப்பட்ட முற்றத்தின் வழியாக ஒட்டின் மேல் ஏறிப் போய்ப்பின்புறத்தில் குதித்து, அவனைத்துரத்தத் தொடங்கினர். அப்போது ஆகாயம் சுத்தமாக இருந்தது. ஆகையால் நட்சத்திரங்களின் வெளிச்சம் பிரகாசமாக இருந்தது. ஒட்டின்மேல் ஏறி அப்பால் குதித்த போலீசார் நால்வரும் நான்கு பக்கங்களிலும் திரும்பிப் பார்த்து கட்டாரித்தேவன் சுமார் ஐம்பது கஜதுரத்துக்கு அப்பால் ஒடிக்கொண்டிருந்ததைக் கண்டு கட்டிலடங்கா மனோதிடமும் வேகமும் அடைந்து அதே திக்கில் ஒடத் தொடங்கினர். கட்டாரித்தேவனும், போலீசாரும் ஒடிய இடம் வயல்களும் வரப்புகளும் நிறைந்த இடமாதலால், ஒரே பாய்ச்சலில் மேடுகளையும் பள்ளங் களையும் வேலிகளையும் மக்களையும் சப்பாத்துப் புதர்களை யும் தாண்டுவோரும் விடாதே பிடி பிடி என்போரும் துப் பாக்கியால் சுடுவோருமாகப் போலீசார் அவனைத் தொடர்ந்து துரத்த அவன் தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் எண்ணத்தோடு அவர்களை விட அதிக விசையாகவும் அரக்கனைப்போல அபூர்வமான திறமையை வெளிப்படுத்தியும் வைக் கோல் போர்களையும், வாய்க் கால்களையும் ஒரே தாண்டாகத் தாண்டி அப்பால் இப்பால் திரும்பி வளைந்து வளைந்து மனக்குதிரைபோலப் பறக்கிறான். அவர்கள் அவ்வாறு மிகமிக ஆச்சரியமாக ஒடுவதும் துரத்துவதுமாக அரைநாழிகை நேரம் கடத்த முன்னால் ஓடிய