பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூர்ணசந்திரோதயம்-2 மாசிலாமணி:- நான் சொல்வதற்கு முன் உனக்கு மூக்கின் மேல் கோபம் வருகிறதே! ஏன் நீ இப்படிக் கோபித்துக் கொள்ள வேண்டும்? நீ செய்யத் தகாத விஷயம் எதையும் நான் பிரஸ்தாபிக்கவில்லையே. நீ ஏற்கெனவே செய்து தேறி யிருக்கும் ஒரு காரியத்தைத் தான் இன்னொரு தடவை செய்யும் படி நான் சொல்லப் போகிறேன். ஆகையால், நீ வீண் நடலம் செய்யக் காரணமில்லையே. முதல் தடவை உன் ஆசையைத் தீர்த்துக்கொள்ள நீ ஒரு மனிதனிடம் சிநேகம் செய்தாய். இரண்டாம் தடவை எனக்கு ஒரு முக்கியமான தஸ்தாவேஜை சம்பாதித்துக் கொடுப்பதற்காக இன்னொரு மனிதரிடம் சிநேகம் செய்தாய். இப்போது நமக்கு வேண்டிய பணத்துக்காக நீ இன்னொரு மூன்றாவது மனிதனிடம் சிநேகம் 240 செய்தால், அதனால் குற்றம் என்ன? மனைவி:- (மட்டுக்கடங்காக் கோபங்கொண்டு பதறி) இது தானா பணம் சம்பாதிக்கும் வழி? இப்படிச் சொல்ல, உங்களுக்குக் கொஞ்சமும் வெட்கமா இல்லையா? ஒரு புருஷர் தம்முடைய பெண்ஜாதியைப் பார்த்துச் சொல்லக் கூடிய வார்த்தையா இது? மாசிலாமணி:- பெண்ஜாதி நிஷ்களங்கமான பதிவிரதையாக இருந்தால், இந்த வார்த்தை சொல்லத் தகாததுதான். நீ அப்படி இல்லையே. உன்னிடம் ஏன் அந்த வார்த்தையை உபயோகிக்கக் &Rs.1–fī£5). மனைவி:- (சிறிது நேரம் விசன்ரித்துக் கலங்கித் தத்தளித்து) அப்படியே இருக்கட்டும். இந்த இரண்டாயிரம் ரூபாய் எவ்வளவு காலத்துக்கு வரப்போகிறது? இது செலவாகிப் போன பிறகு மறுபடி உங்களுக்கு வேண்டிய பணத்துக்கு என்ன செய்யப் போகிறீர்கள்? பெண்ஜாதியின் கற்பை மறுபடியும் விற்றுச் சாப்பிட உத்தேசமா? மாசிலாமணி:- (கடுகடுத்த முகத்தோடு நிரம்பவும்