பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 249 ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறார். நீ நேராக அதற்குள் போ. நான் இப்போது உள்ளே போய் விட்டு வந்தேன். நீ வந்துவிட்ட தாகவும், உன்னை உடனே அவரிடம் அனுப்புவதாகவும் சொல்லிவிட்டு வந்திருக்கிறேன். நீ எப்படி இருக்கிறாய் என்ற விவரத்தை நான் சொல்லக் கேட்டு, அவர் நிரம்பவும் சந்தோஷம் அடைந்ததன்றி, எப்போதும், உன்னைத் தனது அந்தரங்கக் காதலியாக வைத்துக் கொள்கிறேன் என்று சொல்லி விட்டார். உனக்கு ஜெய காலந்தான்; நீ சந்தோஷமாகப் போகலாம்; எதற்கும் யோசிக்காதே, அவருடைய மனசு சந்தோஷம் அடையும்படி நடந்துகொள்' என்று புத்திமதி சொல்லி அனுப்பி வைத்தாள். அந்த யெளவனப் பெண்பாவை மகிழ்ச்சியினாலும் புன்னகையினாலும் மனோக்கியமாக மலர்ந்த வதனத்தினளாய், ஹேமாபாயி காண்பித்த சயன மாளிகையின் வெளித்திரையைக் கொஞ்சமாக நகர்த்திக்கொண்டு உள்ளே நுழைந்து எதிரிலிருந்த புஷ்பசயனத்தை நோக்கினாள். நோக்கவே, அவள் திடுக்கிட்டுப் பேய் கொண்டவள் போல் மாறி, "ஆகா! என்ன இது யார் அங்கே இருப்பது' என்று வாய்விட்டு ஆர்ப்பரித்தாள். புஷ்ப சயனத்தின் மேல் உட்கார்ந்திருந்தபடி அந்த வடிவழகி யின் வருகையைக் கட்டிலடங்கா ஆவலோடு எதிர்பார்த்திருந்த மருங்காபுரி ஜெமீந்தாரும் அவளைக் கண்டு திடுக்கிட்டுத் திகைப்பும் பிரமிப்பும் அடைந்து, 'என்ன ஆச்சரியம்! என் தம்பியின் மகள் லீலாவதி அல்லவா வந்திருக்கிறாள்! ஆ! லீலாவதி என்ன உன்னுடைய தலைவிதி! நீ இப்படிப்பட்ட தொழிலிலா இறங்கிவிட்டாய் என்று வியப் போடு வினவினார்.