பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/267

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 253 ஆகையால், நம்முடைய கலியாணத்தை நாம் ஏற்கனவே இர்மானித்தபடி இப்போது நடத்த முடியாமலிருக்கிறது. நான் இப்போது நிரம்பவும் அவசரமாக ஒர் இடத்துக்குப் போகிறேன். ஆகையால், விவரமாக எல்லா விஷயங்களையும் எழுதக் கூடவில்லை. நான் கண்டுபிடித்த அநாதைப் பெண்ணைக் கைவிட எனக்கு மனமில்லை. ஆகையால், அவளையும் என்னுடைய வேலைக்காரியையும் சேர்த்து நாளையதினம் திருவாருருக்கு அனுப்பப் போகிறேன். அந்த ஊரிலுள்ள என்னுடைய சொந்த வீட்டில் அவள் இருக்கப் போகிறாள். உனக்குக் கொடுக்கும் படி அவர்களிடம் ஒரு கடிதம் எழுதி அனுப்புவேன். அதைப் பார்த்தால் சகலமான விவரங்களும் உனக்கு நன்றாகத் தெரியவரும். அதன்படி நடந்து கொள்ளவும். அதிகம் எழுத நேரமில்லை. இங்ங்னம்: அன்பன், கலியாணசுந்தரம் -என்று எழுதப்பட்டிருந்த கடிதத்தை ஷண்முகவடிவு ஒருதரம் படித்தாள்; மறுபடியும் இன்னொரு தரம் படித்தாள். கலியாண சுந்தரம் தஞ்சைக்குப் போய்த் தனது அக்காளை எப்படியும் அழைத்துக்கொண்டு வந்துவிடுவான் என்றும், தனது கலியாணம் அதி சீக்கிரத்தில் முடிந்துவிடும் என்றும், அந்த அழகிய மடந்தை உறுதியாக நினைத்துக் கொண்டு அதையே எதிர்பார்த்திருந்தாள். ஆகையால், தனது கலியானத்துக்கு எவ்வித இடையூறும் நேரக்கூடுமென்று அவள் எதிர்பார்க்கவில்லை. ஆகையால், அந்தக் கடிதத்தில் எழுதப்பட்டிருந்த சங்கதி அவளால் சிறிதும் எதிர்பார்க்கப் படாததாகவும், சகிக்க இயலாததாகவும் இருந்தது. தனது காதலன் தஞ்சைக்குப் போகுமுன் கடைசியாகத் தனக்கு உறுதிமொழி கூறி, எப்படியும் தன்னையே அதிசீக்கிரத்தில் மணந்துகொள்வதாக வாக்களித்துப் போயிருந்தும், அதைக்