258 பூர்ணசந்திரோதயம்-2 எடுத்து ஷண்முகவடிவினிடம் பணிவாக நீட்ட, அவள் ஆவலோடு அதை வாங்கிப் பிரித்துப் பார்த்தாள். அந்தக் கடிதம் பெருத்த ராமாயணம் போல நீண்டதாக இருக்க, அவ்வளவு சங்கதி என்ன இருக்கப் போகிறது என்ற வியப்பும் திகைப்பும் கொண்டவளாய் ஷண்முக வடிவு அதைத் தனக்குள்ளாகவே படிக்கத் தொடங்கினாள். அது அடியில் வருமாறு எழுதப்பட்டிருந்தது
என் ஆசையும் தவப்பயனும் உருவெடுத்து வந்த உயிருக்கு உயிரான கண்மணி ஷண்முக வடிவுக்கு உன்னையே சதாகாலமும் நினைத்து உருகும் உன் பிராணபதியான கலியான சுந்தரம் எழுதிக் கொள்ளும் லிகிதம். உபயகுசலம். நேற்றைக்கு முந்திய நாள் நான் உனக்கு வெகு சுருக்கமாக ஒரு கடிதம் எழுதியனுப்பினேன். அப்போதிருந்த அவசரத்தில், நான் எதை எழுதினேன் என்பதையும், எதை எழுதத் தவறிவிட்டேன் என்பதும் தெரியவில்லை. இருந்தாலும், எல்லா விஷயங் களையும் விரிவாக எழுதாமல் சுருக்கமாகவும் பூடகமாகவும் எழுதியிருப்பதைக் கண்டு நீ பலவகையான சந்தேகங்கள் கொண்டு நேற்று முழுதும் வருந்தியிருப்பாயோ என்ற சந்தேகம் இப்போது தோன்றி என் மனசை வதைக்கிறது. அந்தக் கடிதம் எழுதியதைவிட எழுதாமலிருந்து இருக்கலாமென்ற எண்ணம் இப்போது தோன்றுகிறது. ஆனாலும், கைதவறிச் செய்யப்பட்டுப் போன ஒரு காரியத்தைப் பற்றி நாம் விசனப்படுவதில் பயனில்லை. அந்தக் கடிதத்தினால், உன் மனம் சங்கடப்பட்டிருந்தால் அதைப் பற்றி நீ என் மேல் ஆயாசப்படாமல் இருக்கும்படி வேண்டிக் கொள்ளுகிறேன்.
நான் நமது கலியாணத்தை நடத்திவைப்பதற்கு உன்னுடைய அக்காளையும் அழைத்துவர வேண்டுமென்ற ஆசையினால் தூண்டப்பட்டு அவ்விடத்தை விட்டு இந்த ஊருக்கு வந்து விட்டேன். ஆனாலும், உன்னை விட்டுப் பிரிந்து வந்த விசனமும் பிரிவாற்றாமையும் என் மனசைப் புண்படுத்திக்
பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/272
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
