பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/277

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 263 நடந்தது. அந்த சங்கீதத்தின் கவர்ச்சியை மீறிக்கொண்டு நான் இப்பால் போக முடியவில்லை. ஆகையால், நான் துவிடத்தில் நெடுநேரம் வரையில் இருந்து சங்கீதக் கச்சேரி முடிவடைந்தபிறகு அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டு என்னுடைய ஜாகையை நோக்கி நடக்கலானேன். என்னுடைய ஜாகை தஞ்சைக்கு வடக்கில் சுமார் அரைமைல் தூரத்திலுள்ள கருத்தட்டாங்குடி என்ற ஊரிலிருந்தது. நான் போனபோது இரவு ஒன்பதுமணி சமயம் இருக்கலாம். வழி முழுவதும் இருள் அடர்ந்து இருந்தது. வழியின் இருபக்கங்களிலும், வீடுகள் இல்லாமல், அடர்ந்த தோப்புகளே இருந்தன. ஆனால், ஒரு பர்லாங்கு தூரத்துக்கு ஒரிடத்தில் மங்கலான சர்க்கார் வெளிச்சம் இருந்தது. அப்படிப்பட்ட பாட்டையின் வழியாக நான் என் ஜாகையை நோக்கி வந்து கொண்டி ருந்தேன். எனக்குக் கொஞ்ச தூரத்துக்கு முன்னாலிருந்த சர்க்கார் விளக்கினடியில் வந்த யாரோ ஒரு மனிதர் பொத்தென்று கீழே வீழ்ந்ததை நான் கண்டேன். காணவே, நான் திடுக்கிட்டு நிரம் பவும் ஆச்சரியமடைந்து, அது யாராக இருக்குமென்று யோசித்தேன். எவனாவது குடிகாரன் குடிவெறியினால் மயங்கி அப்படி விழுந்திருப்பானென்ற எண்ணமே என் மனசிலுண்டாயிற்று. அந்த இருளில், அப்படிப்பட்ட நிர்மாதுஷயமான அந்த இடத்தில் நான் மாத்திரம் தனியாகப் போய் அந்தக் குடிகாரனிடத்தில் நெருங்க, எனக்கு ஒருவித அருவருப்பும் அச்சமும் உண்டாயின. இருந்தாலும், நான் எப்படியும் ஜாகைக்குப் போக வேண்டியவன். ஆகையால் துணிந்து மேலே நடந்து அந்த விளக்கண்டை நெருங்கிப் பார்க்கிறேன். ஆகா! என்னுடைய ஆச்சரியமும் தவிப்பும் அளவிலடங்காமல் பெருகின. அங்கே வீழ்ந்து கிடந்தது சுமார் பதினாறு வயசுள்ள ஓர் அழகிய பெண்; தக்க பெரிய மனிதருடைய வீட்டுப் பெண்ணைப் போல மிருதுத் தன்மையும் செழிப்பும் நிறைந்து கட்டழகு வாய்ந்தவ ளாகவும், விலை உயர்ந்த ஆடையாபரணங்களை அணிந்தவ