284 பூர்ணசந்திரோதயம்-2 ஜீவனம் பண்ணலாம். நான் முதலில் அவசரமாக அம்மன் பேட்டைக்குப் போய்விட்டு வருகிறேன்' என்று சொல்ல, அதைக்கேட்ட அந்தப் பெண் அளவற்ற சந்தோஷமும் பூரிப்பும் அடைந்து, தனது நன்றியறிதலின் பெருக்கை வெளியிட்டு, நான் சொன்னபடியே நடந்து கொள்வதாக ஒப்புக் கொண்டாள். நான் உடனே சுருக்கமாக ஒரு கடிதம் எழுதித் தபாலில் அனுப்பினேன். அப்படி நேற்றையதினம் கடிதம் அனுப்பிய பிறகு நான் உடனே புறப்பட்டு ஒரு வண்டி அமர்த்திக்கொண்டு அம்மன்பேட்டைக்குப் போய்த் தந்திரமாக விசாரித்தேன். அன்னத்தம்மாளுடைய மற்றப் பெண்கள் மூவரும் அவர்கள் குறித்திருந்த காலத்திலேயே புறப்பட்டுப் பூனாவை நோக்கிப் பிரயாணம் போய் விட்டதாக நான் உணர்ந்துகொண்டேன் ஆகையால், நானும் பூனாவுக்கு நேரில் டோகவேண்டியது அத்தியாவசியமான காரியம் ஆகிவிட்டது. எனக்கு வேண்டிய வண்டியையும் வழிப் பிரயாணசாமான்களையும் சேகரம் செய்து கொள்ள நேற்று முழுவதும் பிடித்தது. இன்றைய தினம் அதிகாலையில் உனக்கு இந்தக்கடிதத்தை எழுதி இவர்களிடம் கொடுத்தனுப்பி விட்டு, நானும் வண்டி ஏறிக் கொண்டு செஞ்சிக்கோட்டையை நோக்கிப் பிரயாணம் புறப்பட்டுப் போகிறேன். அன்றையதினம் நான் பொன்னிறைக்குப் போன காலத்தில் உன்னைக் காப்பாற்றும் படி ஈசுவரன் என்னைக் கொண்டுவந்து நல்ல சமயத்தில் உன்னிடம் சேர்த்தார். நேற்றைய தினம் இந்தப் பெண்ணை நான் காப்பாற்றும் பொருட்டு ஈசன் இவளை என்னுடைய வழியில் கொண்டுவந்து விட்டார். இப்போது பூனாவிலுள்ள இளவரசியான லலித குமாரிதேவியைக் காப்பாற்றுவதற்காக ஈசன் என்னைத் தூண்டி அனுப்புகிறார். இப்படிப்பட்ட பெருத்த அபாய சமயங்களில் இருப்பவரை நாம் உயிரைக் கொடுத்தாகிலும் காப்பாற்றியே தீர வேண்டும் என்பதை நீயே ஒப்புக் கொள்வாய் என்று நம்புகிறேன். நீயும் பெண்ணாகையால், லலிதகுமாரி தேவியின் விஷயத்தில் உனக்கும் அபாரமான இரக்கமும்
பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/298
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
