பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290 பூர்ணசந்திரோதயம்-2 முத்துலக மி வெளிப்பார்வைக்குக் குள்ளம், கபடம், துர்க் குணம் முதலியவைகள் சிறிதும் இல்லாத பரம ஸ்ாதுவாகவும் மகலலிதமான இனிய மனிஷியாகவும் காணப்பட்டாலும், அவளுக்குள் ஒரு பெரிய பெண் பேய் மறைந்து கொண்டிருந்தது என்றே சொல்ல வேண்டும். எவ்வித மோசத்துக்கும் எவ்வித இழி செயலுக்கும் அவள் சிறிதும் பின்வாங்கக் கூடியவளே அல்ல. சமயம் வந்தால் அவள் தனது அக்காளான அன்னத்தம்மாளினது விஷயத்தில் கூடப் பெருத்த மோசம் செய்யக்கூடியவளாக இருந்தாள். அன்னத்தம்மாளினது புத்திரிகளான மூவரையும் கொலை செய்துவிட்டால் ஆயிரம் ரூபாய் தருவதாக யாராகிலும் பிரரேபித்தால், முத்து லக்ஷ்மியம்மாள் அப்படிப்பட்ட கொடிய செய்கைக்கும் இணங்கக் கூடியவளாக இருந்தாள். ஆனால், அன்னத்தம்மாள், தனது தங்கை தன் விஷயத்தில் எப்போதும் உண்மையாக நடந்து கொள்வாள் என்றும், எப்படிப்பட்ட வஞ்சகமும் புரியமாட்டாள் என்றும் நம்பியிருந்தாள். ஆகையால், தனது புத்திரிகளுக்குத் துணையாக அவளை அனுப்பி வைத்தாள். அவ்வாறு புறப்பட்ட பெண் பிரயாணிகள் இடையிடையே குறுக்கிட்ட ஊர்களுக்கு அருகில் ராஜபாட்டையின் மேலிருந்த சத்திரங்களில் தங்கி, வேலைக்காரர்களைக் கொண்டு சமையல் செய்வித்துத் தங்களது போஜனத்தை முடித்துக் கொண்டும் இராக் காலங்களில் அவ்விடங்களில் தங்கியும், அதிகாலையிலும் சாயுங்கால வேளையிலும் பிரயாணம் செய்தும் அதிகப் பிரயாசையின்றி மெலுக்காக வழியைக் கடந்து, சில தினங்களில் செஞ்சிக் கோட்டையை அடைந்து, அந்த ஊரிலிருந்த ராஜாவின் சத்திரத்தில் நிரம்பவும் வசதியான ஓரிடத்தில் இறங்கினர். அந்த ராஜ்யத்தின் மகாராஜனுக்குத் தஞ்சையின் பெரிய ராணியால் கொடுக்கப்பட்டிருந்த கடிதத்தை ஒரு வேலைக்காரன் எடுத்துக் கொண்டுபோய், அந்த ஊர் மகாராஜனது மெய்க் காவலனிடம் கொடுத்து ராஜனிடம் சேர்ப்பிக்க, அந்த ராஜன், அன்னத்தம்மாளினது பெண்களுக்கு