பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/328

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


314 ベー பூர்ணசந்திரோதயம்-2 கொள்ள அதை உணர்ந்து தனம் அம்மாள், 'அடாடா என்ன பாதை இது மேடும் பள்ளமும் மனிதருடைய எலும் பு களையெல்லாம் தவிடுபொடியாக்கி விடும் போல இருக்கிறதே!" என்று ரஸ்தாவின் மேலும், வண்டியின் மேலும், குறை கூறிக்கொண்டு தனது மூலைக்குப் போய்ச் சேர்ந்தாள். அதன்பிறகு சிறிது நேரத்திற்கு எல்லாம் வண்டி அவர்கள் தங்க வேண்டிய ஊருக்குப் போய்ச் சேர்ந்தது. வழியில் இருந்த சுங்கன் சாவடியில் பணங் கொடுத்து சீட்டு வாங்கும் தடபுடலிலும், அதன் பிறகு அவர்கள் தங்கவேண்டிய சத்திரத்தில் இறங்கி சாமான்களை இறக்கிய தடபுடலிலும், சத்திரத்தின் வேலைக்காரனை அழைத்துத் தங்களெல்லோ ருக்கும் செளகரியமான இடம் பார்த்துப் படுக்கைகள் விரிப்பதிலும் அவர்கள் எல்லோரும் தத்தம் கவனத்தைச் செலுத்தி இருந்தனர். ஆதலால், கலியாணசுந்தரம் வண்டியில் நடந்த விஷயங்களைப் பற்றிய நினைவை மறந்திருந்தான். பெண்டீர் நால்வரும் பிரத்தியேகமான ஒர் அறையில் சயனித்துக் கொண்டனர். கலியாணசுந்தரம் அவர்களுக்குக் காவலாக அந்த அறைக்கு வெளியில் இருந்த ஒரு திண்ணையில் படுத்துக் கொண்டான். ஆனால், அவன் துயிலில் ஆழ்வதற்குள், அவனது மனதில் பலவகையான நினைவுகள் தோன்றி நாடகம் நடித்தன. அன்னத்தம் மாளினது மூத்த பெண்கள் இருவரது நடத்தையைப் பற்றிய நினைவே அவனது மனதில் மும்முரமாக எழுந்து வதைத்துக் கொண்டிருந்தது. அவர்கள் இருவரும் தாங்களாகவே வேண்டுமென்று அப்படி நடந்து கொண்டார்களாஅல்லவா என்பதை நிச்சயிப்பதற்குள்ள ஆதாரங்களை நினைத்து நினைத்து எவ்வித முடிவிற்கும் வரமாட்டாமல் அவன் குழம்பி இருந்த சமயத்தில், கடுந்துயில் உண்டாகி அவனைத் தூக்கி இருளில் ஆழ்த்திவிட்டது. மறுநாள் காலையில் அவர்கள் எல்லாரும் எழுந்து காலைக் கடன்களையும் காலை போஜனத்தையும் முடித்துக்கொண்டு