பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/340

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


328 பூர்ணசந்திரோதயம்-2 ஒருவேளை நம்முடைய அபிராமியினிடத்தில் மோகம் கொண்டிருப்பாரோ? இவருடைய மர்மம் ஒன்றுமே விளங்கவில்லையே! அம்மாளு:- எனக்கும் இது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. ஆனால், இவர் நம்முடைய அபிராமியை ஏறிட்டுப் பார்த்து அவளோடு ஒரு வார்த்தை கூடச் சொன்னதை நான் பார்க்கவில்லை. ஆகையால், இவருடைய மனம் அவளிடம் நாட்டம் கொண்டிருக்கிறது என்று நினைக்க முடியாது. இவருக்குச் சுமார் இருபத்திரண்டு அல்லது இருபத்துமூன்று வயசு இருக்கலாம். இதற்குள் இவர் உலகைத் துறந்து சந்நியாசியாகி இருப்பாரா? அப்படி இருந்தால் காஷாய வஸ்திரமும் திருவோடும் இருக்குமே. அதெல்லாம் ஒன்றுமில்லை. விஷயம் வேறாக இருக்கும். நல்ல தக்க பெரிய மனிதர் வீட்டுப் பிள்ளைகளில் சிலர் இப் படித்தான் நற் குண நன்னடத்தை உடையவர்களாக இருப்பார்கள். ஸ் திரீகளின் பதிவிரதா சிரோன்மணிகளாக இருப்பவர்களுக்கு உள்ள நாணம், மடம், பயிர்ப்பு முதலிய குணங்களெல்லாம் இவர்களிடத்திலும் இருக்கும். எளிதில் விலக்க முடியாத வெட்கத்தினாலும், புதிதாக இந்தக் காரியத்தில் இறங்குவதனால் உண்டாகும் ஒருவித பயத்தினாலும், இவர்கள் இப்படித்தான் நடப்பார்கள். ஆனால், இது காலக்கிரமத்தில் விலகிப்போகும். நாம் இதோடு விட்டு விடாமல் மேன்மேலும் முயற்சி செய்து கொண்டே போனால், இவருடைய கூச்சமும் பயமும் விலகிக் போகும் அதற்கப்பால் இவர் இந்த விஷயத்தில் பெருத்த நிபுணர் ஆகிவிடுவார். கொஞ்சம் ருசி கண்டு கொள்ளும் வரையில்தான் இந்தத் தொந்தரவெல்லாம். அதற்குமேல் இரத்தம் குடித்து ருசிகண்ட புலிபோல மாறிவிடுவார். அதன்பிறகு இவர் தலைகால் தெரியாமல் இந்தத் துறையில் இறங்கி விடுவார் என்பது நிச்சயம். .