பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் - 33 அந்தக் கபட சன்னியாசி இன்னம் சில நிமிஷ நேரத்தில் வாசல் பக்கத்தில் வந்து கதவை இடிக்கப் போகிறான்; மற்ற முரடர்கள் ஒட்டின் மேல் ஏறி முன்கட்டிற்கு வந்து விடுவார்கள். அதற்குள் தான் என்னசெய்கிறது, அல்லது, எப்படி வெளியில் போகிறது என்று அவள் யோசிக்கலானாள். அவளது கையிலிருந்த விளக்கு காற்றின் வேகத்தினால் அணைந்து போய்விட்டது என்பது முன்னரே சொல்லப்பட்ட விஷயம். ஆகவே, அந்த இடம் முழுதும் அந்தகாரமான இருள் சூழ்ந்து போயிருந்தது. ஆகையால், மனிதர் அல்லது வேறே வஸ்து இருந்ததே தெரியாதிருந்தது. அந்த இடத்தில் தான் எப்படித் தனது உயிரை மாய்த்துக் கொள்வது, எந்த வஸ்துவின் உதவியால் உயிர் துறப்பது என்ற யோசனை தோன்றியது. அந்த இருளில் அவளுக்கு எவ்விதமான யுக்தியும் தோன்றவில்லை. அவள் அவ்விடத்தில் நின்ற ஒவ்வோர் இமைப்பொழுதும் ஒவ்வொரு பெரிய கற்பகாலம் போலத் தோன்றி வதைத்தது. அவளது உடம்பு பூமியில் தரித்து நிற்காமல் ஆகாயத்தில் பறக்கிறது. புதிதாகக் கூண்டில் அடைக்கப்பட்ட பறவை போல அவளது உயிர் பம்பரமாகச் சுழல்கிறது. தான் முன் கட்டிற்குப் போவதைவிட இரண்டாவது கட்டின்கதவை மூடி உட்புறத்தில் தாளிட்டுக் கொண்டு இரண்டாவது கட்டிலேயே இருந்து விட்டால் முன் கட்டுக் கதவை சன்னியாசி இடிக்க, அவள் திறக்காமையில் இருந்து அவனது துணைவர்கள் ஒட்டின் மேலிருந்து இரண்டாங்கட்டில் குதித்துக் கதவைத் திறந்து விடுவதன்றித் தன்னையும் ஒரு நொடியில் பிடித்துக்கொள்வது நிச்சயம் என்ற எண்ணமும் உண்டாயிற்று. ஆகையால், அப்படிச் செய்வதும் உபயோகமற்ற முயற்சியாகத் தோன்றியது. இரண்டாங் கட்டிலிருந்த முற்றத்தின் வழியாக ஒட்டின் மேல் ஏறிப் பின்புறத்தில் குதித்துவிடுவது சுலபமான யோசனையாகத் தோன்றியது. ஆனால் முற்றத்தில் இருந்து கூரை ஓர் ஆள் உயரத்திற்கும் அதிகமிருந்தது. ஆகையால், அவள் ஏறுவதற்கு ஏணி, மூங்கில், அல்லது அடியில்