பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/78

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


74 பூர்ணசந்திரோதயம்-2 பெருத்த காரியத்தைச் செய்து என்னுடைய மானத்தையும் உயிரையும் காப்பாற்றி என்னைக் கொண்டு வந்து பத்திரமாக என்னுடைய ஜாகையில் சேர்த்த மகா சிறந்த பேருபகாரியான தங்கள் விஷயத்தில் நான் பெருத்த அபராதி யாகிவிட்டேன், ரஸ்தா வரையில் வந்த தங்களை உபசரித்து உள்ளே அழைத்துக்கொண்டு வர நான் கடமைப்பட்டவள். அவ்வளவு துரம் என் விஷயத்தில் உரிமை பாராட்டி, என் விஷயத்தில் எத்தனையோ பேருதவிகளைச் செய்த தாங்கள், அதே விதமான உரிமை பாராட்டி உள்ளே வருவீர்கள் என்று நினைத்துக் கொண்டு உள்ளே வந்துவிட்டேன். அப்படி நான் அவசரமாக உள்ளே வந்ததற்கு இன்னொரு முக்கியமான காரணம் இருக்கிறது. நோயாளியாகப் படுத்திருக்கும் என்னுடைய அத்தையை நான் நேற்றுப் பகலில் விட்டுப் பிரிந்து போனேன். அதன்பிறகு எனக்கு நேர்ந்த அபாயத்தில் நான் மறுபடியும் உயிரோடு திரும்பி வந்து என்னுடைய அத்தையைப் பார்க்கப் போகிறேனோ என்ற ஆவலினால் நெடுநேரமாக வதைக்கப்பட்டிருந்தவள். ஆகையால், நான் வண்டியை விட்டுக் கீழே இறங்கியவுடனே, அத்தையைப் பார்க்க வேண்டுமென்ற அவாவினால் தூண்டப்பட்டவளாய் விசையாக உள்ளே போனேன். தாங்கள் உள்ளே வரத் தயங்கினாலும், என்னுடைய வேலைக்காரிதங்களை உபசரித்து அழைத்துக் கொண்டு வருவாள் என்ற ஒரு நம்பிக்கையும் இருந்தது. ஆகையால், நான் வந்துவிட்டேன். இவைகள் எல்லாம் நான் வந்ததற்குக் காரணமாக இருந்தாலும், நான் என்னுடைய கடமையில் தவறிவிட்டேன் என்பதை மறுக்கமுடியாது. என்னுடைய அறியாமையைத் தாங்கள் மன்னித்துக்கொள்ள வேண்டும். நான் அவ்வளவு தூரம் தங்கள் விஷயத்தில் முறை தவறி நடந்திருந்தும், தாங்கள் அதை இலட்சியம் செய்யாது மறுபடியும் இங்கே வந்ததைப் பற்றி நான் நிரம் பவும் சந்தோஷம் அடைகிறேன். என்னுடைய வேலைக்காரி இன்னம் கொஞ்சநேரத்தில் வந்துவிடுவாள்.