பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/99

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்காள் 95 வேலைக்காரியும் தான் எப்படி அவரிடம் பேசுவது என்பதை உணராதவளாய் லஜ்ஜையும் அச்சமும் கொண்டு சிறிது நேரம் தத்தளித்துத் தயங்கியபின் பணிவாக அவரை நோக்கி, “எஜமானுக்கும் இன்றையதினம் தஞ்சையிலிருந்து ஒரு கடிதம் வந்திருக்கும் என்று நினைக்கிறேன்' என்று புன்னகையாகவும் மகிழ்ச்சியாகவும் பேசினாள். அதைக்கேட்ட கலியாணசுந்தரத்தின் கிலேசம் சிறிதளவு நீங்கியது. அவனது அழகிய முகம், மகிழ்ச்சியாலும் புன்னகையாலும் மலர்ந்தது. நிரம்பவும் அன்பு ததும்பிய முகத் தோடு அவளைப் பார்த்து, 'நீ சொல்வதிலிருந்து உங்களுக்கும் இன்றைய தினம் ஒரு கடிதம் வந்திருப்பதாக அர்த்தமாகிறது. அப்படித்தானே? அதனால் தான் நீ இன்றைய தினம் வழக்கத்தைவிட அதிகமாக சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கிறாய் போலிருக்கிறது" என்று நயமாக வினவ, அதைக் கேட்ட வேலைக்காரி, 'ஆம்; நிஜந்தான்; எங்களுக்கும் கடிதம் வந்திருக்கிறது. அதோடு கலியாணமும் வந்திருக்கிறது. அதைப் படிக்க, இப்போது எங்களுடைய மனசில் எல்லாம் பொறுக்கமுடியாத சந்தோஷம் உண்டாயிருக்கிறது' என்று ஹாசியமாகப் பேசினாள். அதைக் கேட்ட கலியாணசுந்தரம், 'ஓகோ அப்படியா சங்கதி அப்படியானால் நீங்கள் எல்லோரும் சந்தோஷப்பட நியாயம் இருக்கிறது. அப்படியானால் கலியாணத்துக்கு நானும் வரட்டுமா? எனக்குக் கலியானச் சாப்பாடு உண்டா?” என்று வேடிக்கையாகப் பேசினான். வேலைக்காரி சந்தோஷமாகப் புன்னகை செய்து, "இந்தக் கலியாணம் தாங்கள் இல்லாவிட்டால் நிறைவேறாது என்பது தங்களுடைய பெயரைப் பார்த்தாலே தெரியுமே! எந்தக் கலியாணத்தையும் அழகுப்படுத்தி சோபிக்கச் செய்கிறவர் மாப்பிள்ளை தாங்கள் கலியாணசுந்தரமென்று பெயர் வைத்துக் கொண்டிருப்பதிலிருந்து இந்தக் கலியாணத்தில் gi. F.İİ-7 -