பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

if Ö - பூர்ணசந்திரோதயம்-3 என்னைவிட்டுப் பிரிந்துபோக வேண்டும் என்று ஆசைப்பட்டால், நான் சுலபத்தில் அதற்கு இணங்கி விடக் கூடியவனா? அந்த ஐந்நூறு ரூபாய் எனக்கு ஒரு பொருட்டென்று நீ எண்ணிக்கொண்டாயா? அது ஒரு நாளும் பலியாது; நான் உன்னை விடப் போகிறதும் இல்லை. நான் எப்போதும் உன்னோடு கூடவே இருக்கிறேன். நீ எப்படித்தான் தப்பித்துப் போகிறாய் என்று நான் பார்க்கிறேன்" என்றார். லீலாவதி அதற்கு எவ்வித மறுமொழியும் கூறாமல், வெறு வெளியை உற்று நோக்கிய வண்ணம் அசைவற்றுக் கற்சிலை போலச் சிறிது நேரம் உட்கார்ந்திருந்தாள். அவளது அழகிய முகம் முற்றிலும் மாறி விகாரமாகத் தோன்றியது. அவளது மனம் எண்ணாததை எல்லாம் எண்ணியது. இறந்துபோனதனது ஆசை நாயகரான ஜெமீந்தாரது நற் குணங்களும், அழகிய தோற்றமும், அவர் தன்னிடத்தில் வைத்திருந்த எல்லையற்ற வாஞ்சையும் அவளது மனதில் தோன்றி அதை முற்றிலும் நெகிழ் வித்த்ன. இறந்துபோனவருக்கும் மாசிலாமணிப் பிள்ளைக்கும் இருந்த வேறுபாடுகளை நினைக்க நினைக்க, அவளது மனம் ஏங்கித் தவித்தது. தனக்கும் மாசிலாமணிப் பிள்ளைக்கும் முடித்து போட்டிருந்த விதியை நினைத்து நிந்தித்து அவள் துயரமே வடிவாக வீற்றிருக்க, மறுபடியும் மாசிலாமணிப் பிள்ளை, 'என்ன லீலாவதி: ஒன்றும் சொல்லாமல் பேசாது இருக்கிறாய்? நான் சொன்னது நியாயம் என்பது உன் மனசில் பட்டுப்போய் விட்டது பார்த்தாயா? என்னவோ போனது போகட்டும். நீ செய்ததையும் நான் மறந்து விடுகிறேன். நான் இதுவரையில் செய்ததையும் நீ மறந்துவிடு. இனி நமக்குள் எவ்வித மனஸ்தாபமும் ஏற்படாத படி நான் பார்த்துக் கொள்ளுகிறேன். என்னைவிட்டுப் பிரிந்து போய்விட வேண்டுமென்ற அந்த மூட எண்ணத்தை இதோடு விட்டுவிடு. உன்னுடைய பெரிய தகப்பனார் எவ்வளவுதான் பணக்காரராக இருந்தாலும், அவர் உனக்கு லட்சலட்சமாகப்