பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே.துரைசாமி ஐயங்கார் 109 மரணத்துக்கு நீயே உத்தரவாதி என்பதை இதற்குமுன் ஒரு தடவை நீயே ஒப்புக் கொண்டிருக்கிறாய். இறந்து போனவருடைய பிள்ளையும் சொந்தக்காரர்களும் அவர் எங்கே போயிருப்பார் என்பதை அறிந்துகொள்ள மாட்டாமல் இன்னமும் தேடி அலைந்து தவித்து மன நொந்து உருகிக் கொண்டிருக்கிறார்கள். நான் உன்னை அவர்களிடம் காட்டிக் கொடுத்திருந்தால், இந்நேரம் உன்னுடைய மானமும் போயிருக்கும், உனக்கு தீவாந்தர சிட்சையும் கிடைத்திருக்கும். நீ ஆயுசுகால பரியந்தம் எந்தக் காட்டிலிருந்து எப்படிப்பட்ட சங்கடங்களுக்கு ஆளாயிருப்பாயோ அதுவும் அன்றி உனக்கும், உன் பெரியப்பனுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் என்றைக்கும் மாறாத ஏச்சும் இழிவும் ஏற்பட்டிருக்கும். அதற்கெல்லாம் இடம் கொடாமல் ரகசியமாக அந்தப் பிணத்தைப் புதைத்து நான் உன்னைத்தப்ப வைத்தது அன்றி, நீ செய்த அந்தக் குற்றத்தையும் அவ்வளவாகப் பாராட்டாமல் மறந்துகொண்டு வந்திருக்கி றேன். அந்த விஷயத்தில் நான் உனக்குச் செய்த பேருதவிக்கு நீ எத்தனையோ தலைமுறை ஜென்மம் எடுத்து எனக்கு ஊழியம் செய்யக் கடமைப்பட்டிருக்கிறாய். நீ செய்த கொலைக் குற்றத்திலிருந்து உன்னைக் காப்பாற்றியது போல நான் செய்த கொலைக்குற்றத்திலிருந்து என்னைத் தப்பவைப்பதற்காக நீ அன்று இளவரசரிடம் போய் தஸ்தாவேஜியில் கையெழுத்து வாங்கிக்கொண்டு வந்தாய். இப்போது அதற்காக நாம் இந்த ஊரைவிட்டுப் போய் விட வேண்டும் என்ற நினைவினால் நமக்குத் தேவையான பண்ம் சம்பாதித்துக் கொண்டு வரப் போனாய். இவ்வளவுதானே சங்கதி. நான் செய்த உதவிக்கு நீ பதில் உதவி செய்தாய். நான் மாத்திரம் உன்னை அதிகக் கொடுமையாக நடத்தி விட்டேன் என்று நீ சொல்வது எப்படிப் பொருந்தும். நாம் ஒருவருக்கொருவர் உதவியாகத்தானே இருக்கிறோம். அப்படியிருக்க, நீ திடீரென்று இப்படிப்பட்ட விபரீதமான எண்ணத்தைக் கொள்ளவே நியாயம் இல்லையே. யாதொரு முகாந்திரமும் இல்லாமல் நீ திடீரென்று