பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 1 13 கதவை மூடி வெளிப்பக்கத்தில் தாளிட்டுக் கொண்டு வேறோர் அறைக்குப் போய்ப் படுத்துக் கொண்டார். தனியாக விடப்பட்ட லீலாவதி கதவின் உட்புறத்தில் தாளை மாட்டிவிட்டுத் தனது கட்டிலின் மீது ஏறி உட்கார்ந்து தாங்க வொண்ணா விசனத் தோடு தலைப்பக்கத்தில் சாய்ந்து கொண்டாள். அவளது மனம் முற்றிலும் கலவரமடைந்து போயிருந்தது. ஆகையால், தான் படுக்க வேண்டும் என்ற எண்ணமாவது, தூங்க வேண்டும் என்ற உணர்ச்சியாவது உண்டாகவில்லை. அவள் தனது பரிதாபகரமான நிலைமையைப் பற்றிப்பலவாறு எண்ணமிடத் தொடங்கினாள். அதற்குமுன் அலுத்துச் சோர்வடைந்து போனதாகத் தோன்றிய அவளது மனதும், தேகமும் மறுபடியும் உற்சாகத்தை அடைந்தன. ஒருவிதத் துணிவும் மனோதிடமும் உண்டாகிப் பெருகிக்கொண்டே இருந்தன. தன்னைத் தனது புருஷன் எவ்வளவு தூரம் வற்புறுத்தினாலும், நயந்தாலும் தான் எப்படியும் தனது கருத்தை நிறைவேற்றியே தீரவேண்டும் என்ற ஒரே முடிவு அவளது மனதில் வலுவடைந்து கொண்டிருந்தது. அன்றையதினம் தான் அவ்வளவுதூரம் துணிந்து தனது புருஷனை எதிர்த்து அவரை விட்டுப் பிரிந்து போக உறுதி கொண்டிருப்பதாகக் கொஞ்சமும் தாட்சணியம் பாராமல் அலட்சியமாகப் பேசிய பிறகு, தான் மறுபடியும் தனது உறுதியைத் தளரவிட்டு, பழையபடி அவரோடு கூட இருக்க இணங்கினால், தன் விஷயத்தில் ஒருவித இளக்காரம் உண்டாகி விடும். ஆதலால், தான் அதற்குப் பின் அவரிடத்தில் கேவலம் அடிமையிலும் அடிமையாக இருந்து முன்னிலும் ஆயிரமடங்கு அதிகப் பணிவாக அடங்கி ஒடுங்கி நடந்து கொள்ள வேண்டும் என்பது நன்றாகத் தெரிந்தது. அவரை விட்டுத் தான் பிரிந்து தனது பெரிய தகப்பனாரிடம் போய் விட்டால், அந்த மனிதர் தன்மீது தீராப்பகைமை கொண்டு பல வகையில் முயன்று தமது வன்சினத்தை எப்படியும் முடிக்க