உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 121 அதைக் கேட்ட தோட்டக்காரி, சரி; இதுதானா ஒரு பெரிய காரியம். அப்படியே செய்கிறேன். நீங்கள் போங்கள். நான் அரை நாழிகையில் வருகிறேன்' என்றாள். லீலாவதி, “நீ வராமல் இருந்து விடப் போகிறாய்! தாழ்ப்பாள் திறந்தபடி இருந்தால், அவர் எல்லாவற்றையும் உடனே கண்டு கொள்வார்; உன் புருஷன் தஞ்சாவூருக்குப்போனது கூட அவருக்குத் தெரிந்து போகும். ஆகையால், நீ இந்த விஷயத்தில் கொஞ்சம் ஏமாறிப் போவாயானால், என் தலைக்குக் கல் வந்துவிடும். ஜாக்கிரதை, ஜாக்கிரதை' என்று மறுபடியும் வற்புறுத்தி அவளை எச்சரித்து அவ்விடத்தைவிட்டு மெல்ல நடக்கலானாள். நடந்து முன்பக்கத்திற்கு உள்ளே நுழைந்து கூடத்தை நோக்கிச் செல்ல, அப்போது, யாரோ மேன் மாடப்படியிலிருந்து இறங்கி வந்ததால் உண்டான காலடி ஒசை கேட்டது. அதைக் கேட்ட லீலாவதி திடுக்கிட்டு மான்போல மருண்டு சடேரென்று சித்திரப் பதுமைபோல அசைவற்று நின்றுவிட்டாள். - "ஐயையோ என்ன செய்வேன் என்புருஷர் வருகிறார்போல் இருக்கிறதே! தாழ்ப்பாள் கதவை விட்டுப் பெயர்ந்து நாதாங்கியில் தொங்கிக் கொண்டிருப்பதையும், நான் இங்கே நிற்பதையும் அவர் கண்டு கொள்வாரே கண்டு கொண்டால், அவருக்கு உண்டாகும் கோப வெறியில் அவர் என்னை மகா கொடுமையான சித்திரவதைக்கு ஆளாக்கிக் கொன்று போட்டுவிடுவாரே ஐயோ தெய்வமே என்ன செய்யப் போகிறேன்!” என்று தனக்குத்தானே எண்ணமிட்டு அபாரமான திகில் கொண்டு தனது கைகளைப் பிசைந்து கொண்டாள். அவளது முகக்களை மாறி விகாரத்தோற்றமும் உண்டாகி விட்டது. சகிக்க வொண்ணாத கிலியினால் உடம்பு தத்தளிக்க, அவளது இருதயம் தடதடவென்று அடித்துக்கொள்ள மூச்சு ஒடுங்கிப்போய் விட்டது. அந்த மகா துன்பகரமான நிலையில் அவள் பேச்சு மூச்சற்று அசையாமல் நின்றவண்ணம்