பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

選22 பூர்ணசந்திரோதயம்-3 அந்த ஓசையை உற்றுக் கவனித்தாள். மேலே இருந்து இறங்கி வந்த மனிதர் ஒசையை அடக்கித் திருட்டுத்தனமாக வந்தது நன்றாகத் தெரிந்தது. தான் தாழ்ப்பாளை விலக்கிக் கொண்டு வெளியில் போய் ஒசையைக் கேட்டே தனது புருஷர் அப்படி இறங்கிவந்து தன்னைக் கவனிக்கிறார் என்று அவள் நிச்சயப்படுத்திக் கொண்டாள். அவர் கூடத்திற்கு வந்து விட்டால், தான் என்ன செய்கிறது என்ற கவலையும் அச்சமும் எழுந்து அவளைக் கலக்கிவிட்டன. எப்படியும் அவர் தனது அறைக்குப் போய் தாழ்ப்பாளின் அலங்கோலத்திலிருந்து, தான் தப்பி வெளியில் போய்விட்டதாக உணர்ந்து தன்னைத் தேடுவார் என்பது சந்தேகமற விளங்கிவிட்டது. அந்தச் சமயத்தில் தான் அவரது கையில் அகப்பட்டால், அவர் தனக்கு எப்படிப்பட்ட பயங்கரமான தீங்கு இழைப்பாரோ என்ற பெரும்பிதி அவளைத் தூண்டினது. ஆகையால், அவ்விடத்தில் சுருட்டி ஒரு பக்கமாகத் தள்ளி வைக்கப்பட்டிருந்த படுதாவிற்குள் நுழைந்து அவள் மறைந்துநின்ற வண்ணம் இடுக்கின் வழியாக வெளியில் பார்த்துக் கொண்டிருந்தாள். அந்த மனிதர் தமது காலடி ஓசையை அடக்கி மெதுவாகவே நடந்து படிகளைவிட்டுக் கீழே இறங்கினார்; இறங்கியவர் லீலாவதி மறைந்து நின்ற திக்கிலேயே நடந்துவந்தார். அதைக் கண்ட லீலாவதி நடுநடுங்கி நெருப்பின்மேல் நிற்பவள்போலக் கலங்கிக் கிலிகொண்டு நின்றாள். அவளது உயிரில் பெரும்பாகமும் போய் விட்டது என்றே மதிக்க வேண்டும். அவர் படிக்கட்டில் நடந்துவந்தபோது, தான் படுதாவிற்குள் மறைந்திருக்க, அது அவருக்கு எப்படித் தெரிந்திருக்கும் என்ற சந்தேகம் உண்டாயிற்று. அவர் தன்னை நோக்கித்தான் வருகிறாரோ, அல்லது, வேறே எங்கேயாவது போகும் எண்ணத்தோடு அந்த வழியாக வருகிறாரோ என்ற ஐயம் தோன்றி அவளது மனதைக் கரைகடந்த கலவரத்தில் ஆழ்த்தி விட்டது. ஒவ்வொரு விநாடி நேரமும் ஒவ்வொரு பெருத்த