பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 பூர்ணசந்திரோதயம்-3 அவரை அவ்விடத்திலேயே நிறுத்திவிட்டு அந்த அறையை விட்டுத் தோட்டத்திலிருந்த கிணற்றண்டை போனாள். போனவள் மெதுவாக மறைந்து தோட்டக்காரி இருந்த அறைக்குப்போய், அவளிடத்தில் விரைவாக இரண்டொரு வார்த்தைகள் பேசி, தோட்டக்காரன் கடிதத்தைப் போலீஸ் கமிஷனரினது தபால் பெட்டியில் போட்டுவிட்டு விடியற் காலையிலேயே வந்து விட்டான் என்ற செய்தியை உணர்ந்து கொண்டாள். அன்றைய தினம் ஏதேனும் விபரீதமான எந்தச் சங்கதியையும் அவர்கள் இருவரும் வெளியிடாமல் ஒன்றையு மறியாதவர்கள் போல நிரம்பவும் சாமர்த்தியமாக நடந்து கொள்ள வேண்டும் என்று லீலாவதி தோட்டக்காரியிடம் சொல்லி அவளை எச்சரித்துவிட்டு அவ்விடத்தை விட்டு ஓடோடியும் வந்து, தனது காலைக்கடமைகளை ஒரு நொடியில் முடித்துக் கொண்டு சமைலறைக்குள் போய் தனது புருஷன் இருந்த இடத்திற்குப் போனாள். அதற்குள் வேலைக்காரி மாசிலாமணிப் பிள்ளைக்கு இலைபோட்டுப் பலகாரங்கள் பரிமாறி இருந்தாள். ஆகையால், அவர் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். லீலாவதி உள்ளே வந்தவுடன் தான் வழக்கமாகச் செய்வதுபோல, ஒரு தட்டில் ஏராளமான பலகாரங்களை எடுத்து வைத்து, அவை அண்ணாசாமி நாயக்கனுக்கு என்று தனது புருஷரிடம் தெரிவித்தபின், தானும் சிறிதளவு உண்டு, தனது காரியத்தையும் முடித்துக்கொண்டாள். அண்ணாசாமி நாயக்கனுக்குப் பலகாரங்கள் வைப்பதாக அவளது வாய் மாத்திரம் வெளிப்படையாகச் சொல்லியது. ஆனாலும் அந்தச் சமயத்தில் அவளது மனதில் உண்டான அருவருப்பும் சங்கடமும் அளவில் அடங்காதனவாக இருந்தன. கேவலம் திருட்டுத் தொழில் செய்யும் ஒர் இழிசாதியானுக்குத் தான் அவ்வாறு உபசரணை புரிய வேண்டியிருக்கிறதே என்ற நினைவினால் அவள் மட்டற்ற சஞ்சலம் அடைந்தாள். ஆனாலும், கடைசிவரையில் தனது புருஷன் சந்தேகியாதபடி நடித்து அவனைத் தான் அடியோடு ஏமாற்றிவிட வேண்டும்