பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 137 போய் சந்தித்த மனிதர் உன் பெரிய தகப் பனார் என்று நீ சொன்னபோது அது என் மனசில் சுருக்கென்று பட்டதன்றி, உனக்கு ஏற்பட்ட அவமானத்தைப் பற்றி என் மனமும் கலங்கி நிரம் பவும் சங்கடப்பட்டது. இருந்தாலும், எப்போதும் என்னிடத்தில் பணிவாகவும் மரியாதையாகவும் நடந்து கொள்ளும் குணமுடைய நீ நேற்று தாறுமாறாகப் பேசியதைப் பார்க்க, என்னால் சகிக்கமுடியவில்லை. அதுவும் அல்லாமல், . உன்னைவிட்டு நான் பிரிந்திருக்க வேண்டும் என்று நீ சொன்னவுடனே, அது என்னால் கொஞ்சமும் தாளமுடியாத விசனத்தை உண்டாக்கிவிட்டது. அதனால், நானும் உன் விஷயத்தில் கடினமாக நடந்து கொண்டேன். போனது போகட்டும்; எல்லாவற்றையும் நீயும் மறந்துவிடு; நானும் மறந்துவிடுகிறேன். இனி நாம் எவ்வித மனஸ்தாபமும் சச்சரவும் இல்லாமல் தேனும் பாலும் போல இருக்க வேண்டும். இப்போது மணி ஒன்பது இருக்கலாம். வயிறு பசிக்கிறது. வேலைக்காரி பலகாரங்களையும் காப்பியையும் தயார் செய்து வைத்துக்கொண்டு நெடு நேரமாகக் காத்திருக்கிறாள். உனக்கும் பசி உண்டாகி இருக்கும். வா, போய், முதலில் வயிற்றுக் காரியத்தைப் பார்ப்போம். மற்ற சங்கதியெல்லாம் இருக்கட்டும்; பிறகு பார்த்துக் கொள்ளலாம்" என்று அன்போடு கூறிய வண்ணம் கட்டிலைவிட்டுக் கீழே இறங்கி அவளையும் அழைத்துக்கொண்டு வெளியில் வரத்தொடங்கினார். லீலாவதி ஒர் ஆட்டுக் குட்டியைப்போல அவருக்குப் பின்னால் தலை குனிந்தபடி நிரம்பவும் மரியாதையாக நடந்துவர, இருவரும் கூடத்தை அடைந்து சமையலறையை நோக்கிச் சென்றனர். அவ்விடத்தில் வேலைக்காரி அவர்களுக்குத் தேவையான மாதுரியமான சிற்றுண்டி முதலியவைகளைத் தயாரித்து ஆயத்தமாக் வைத்திருந்தாள். லீலாவதி தான் போய் முகம் கை கால்கள் முதலியவற்றைச் சுத்தி செய்துகொண்டு வெகு சீக்கிரத்தில் வந்துவிடுவதாகத் தனது புருஷரிடம் சொல்லி