பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 பூர்ணசந்திரோதயம்-3 உலகத்திலுள்ள மற்ற சகலமான மனிதர்களும் தெரிந்து கொண்டிருந்தால்கூட நான் அவ்வளவாக விசனப்பட்டிருக்க மாட்டேன். என்னுடைய பெரிய தகப்பனாரிடம் போய் பங்கப்படுவது என்றால் அதை விட அதிகமாக மனிதர் அடையக்கூடிய வெட்கக்கேடு வேறே இருக்குமா? வேற யாராக இருந்தாலும் அவ்விடத்திலேயே நாக்கைப் பிடுங்கிக் கொண்டு உயிரைவிட்டிருப்பாள். நானும் அப்படியே தான் செய்ய எத்தனித்தேன். உங்களிடத்தில் நான் வைத்திருக்கும் பிரியம் குறுக்கிட்டு என்னைத் தடுத்து மறுபடியும் இங்கே இழுத்துக் கொண்டு வந்து சேர்ந்தது. அவ்விடத்தில் எனக்கு நேர்ந்த மானபங்கத்தினால் ஏற்பட்ட ஆத்திரமும்துடிதுடிப்பும் இருந்து கொண்டே இருந்தன. அதனாலேதான் நான் உங்களிடத்தில் கொஞ்சம் ஆத்திரமாகப் பேசிவிட்டேன். நீங்கள் என்னைத் தனியாக விட்டுப்போன பிறகு கொஞ்சநேரத்துக்கெல்லாம், என் மனம் மாறிவிட்டது. ஐயோ! நாம் தாறுமாறாகப் பேசி, நம்முடைய புருஷருடைய மனசைப் புண்படுத்தி விட்டோமே என்று நினைத்துப் பொழுதுவிடிகிற வரையில் நான் பட்டபாடு இவ்வளவு அவ்வளவல்ல. இன்றைய காலையில் நீங்கள் வந்தவுடனே உங்களுடைய காலில் விழுந்து நான் செய்ததை எல்லாம் பொறுத்து என்னை rமிக்கும்படி கேட்டுக்கொள்ள எண்ணியிருந்தேன். நீங்களும் வரும்போதே என்னிடத்தில் பிரியமாகப் பேசிக் கொண்டும் கூடிமையான சொற்களை உபயோகித்துக் கொண்டும் வந்தீர்கள் ஆகையால், எனக்கு அதிகப் பிரயாசையில்லாமல், என் கோரிக்கை நிறைவேறியது” என்று மிக மிக உருக்கமாகப்பேசி, அவரை வாஞ்சையோடு கட்டித் தழுவினாள். அவளது வார்த்தைகளைக் கேட்டும், அவளது கரை கடந்த பிரியத்தைக் கண்டும் மாசிலாமணிப்பிள்ளை ஆனந்தக்கண்ணிர் விடுத்தவராய், "ஆகா! நானும் உன் விஷயத்தில் நேற்று கொஞ்சம் பதற்றமாகத்தான் நடந்துவிட்டேன். நீ தஞ்சாவூரில்