பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 135 சரிடம் கையெழுத்து வாங்கின நீகடைசி வரையில் இருந்து அந்த விஷயத்தைப் பூர்த்தி செய்யாமல் போய்விடுகிறாயே என்று நானும் எண்ணி விசனப்பட்டேன். அந்தக் கடிதத்தினாலேதான் என் உயிர் மிஞ்சப்போகிறது. அப்படிப்பட்ட விலை மதிப்பற்ற தஸ்தாவேஜியை வேறே யாரிடத்திலும் கொடுத்தனுப்ப, நான் ஒருநாளும் இணங்கவே மாட்டேன். ஆகையால், மிகுதி இருக்கும் காரியத்தையும் நீதான் தந்திரமாகவும் சாமர்த்திய மாகவும் முடித்துக்கொடுக்க வேண்டும்" என்று வாஞ்சையாக வற்புறுத்திப் பேசினார். அதைக் கேட்ட லீலாவதி முன்னிலும் அதிக உருக்கமும் கலக்கமும் கொண்டவள்போல நடித்துக் கண்ணிர் விடுத்தவளாய், 'ஐயோ பாவம்! என்னைப் பற்றி நீங்கள் அப்படிப்பட்ட சந்தேகங் கூடக் கொண்டீர்களா? படாத பாடெல்லாம் பட்டு அவமானத்துக்கும் இழிவுக்கும் ஆளாகி நான் அந்த விலைமதிப்பற்ற தஸ்தாவேஜை சம்பாதித்த பின், உங்களை ஆபத்தில் விட்டு நான் போய்விடுவேனா? ஒரு நாளுமில்லை. என்னுடைய உயிர் இந்த உடம்பில் இருக்கும் வரையில் நான் உங்களைவிட்டு ஒரு நிமிஷம்கூடப் பிரிந்து போகவே மாட்டேன். அதை நீங்கள் வேத வாக்கியமாக நம்பலாம். நேற்று சாயுங்காலம் நான் ஹேமாபாயின் வீட்டுக்குப் போனது எப்படிப்பட்ட கேவலமான காரியத்தை உத்தேசித்து என்பது உங்களுக்குத் தெரியும். அந்தச் சந்தர்ப்பத்தில் என்னுடைய உண்மையை வேறே யார் தெரிந்து கொண்டாலும், அவர்கள் என்னை எப்படி மதிப்பார்கள்? நான் அடியோடு கேட்டுப் போன ஒரு வேசையென்று எல்லோரும் மதித்து என்னைப்பற்றி நிரம்பவும் தூஷணையாகவும் இழிவாகவும் பேசுவார்கள். அந்த நிலைமையில் என்னுடைய பெரிய தகப்பனார் கண்டுகொண்டால், என்னுடைய மனநிலைமை எப்படி இருந்திருக்க வேண்டும் என்பதை நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள். என்னுடைய கெட்ட நடத்தையை இந்த