பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 151. வேண்டிய வக்கீல்களை ஏற்படுத்தி சாட்சிகளைத் தயாரிக்க வேண்டும். இவைகளையெல்லாம் நானே நேரிலிருந்து கவனித்துச் செய்ய வேண்டுமேயன்றி வேலைக்காரர் களைக் கொண்டு செய்விப்பது என்றால், அது நிரம்பவும் பிரயாசையானகாரியமாயிருக்கும். நமக்கு ஜெயம் கிடைப்பதும் கடினமாகி விடும். ஆகையால், நானும் இன்றைய தினமே தஞ்சாவூருக்கு வந்து, நீங்கள் இருக்கும் சிறைச்சாலைக்குப் பக்கத்திலுள்ள ஏதேனும் ஒரிடத்தை அமர்த்திக் கொண்டு அங்கேயே குடியிருந்து எப்போதும் சிறைச்சாலையின் வாசலிலேயே வந்து காத்துக் கொண்டிருக்கப் போகிறேன்' என்று கூறியவண்ணம் தனது துக்கத்தைப் பொறுக்க மாட்டாதவளாய்த் தேம்பித் தேம்பி அழுதாள். அவளது அந்தரங்கமான உருக்கத்தையும் துணிகரமான மொழியையும் கேட்டு அன்பு மேலிட்டால் இளகி உருகிப் போன மாசிலாமணிப் பிள்ளை தாமும் கண்ணிர் விடுத்தவராய் அவளைக் கட்டி அனைத்து, ஆகா! உன்னுடைய உண்மையான குணத்தையும், மனசையும் அறியாமல், நான் உன் விஷயத்தில் எத்தனை கொடுமைகள் செய்துவிட்டேன்! எனக்கு ஆபத்து நேரும் சமயத்தில் நீ எனக்கு இவ்வளவு தூரம் உதவி செய்வாய் என்று நான் கனவிலும் நினைக்கவே இல்லை. நீ இவ்வளவுதுரம் விசனப்பட்டுக் கலங்கி அழுவது, என்னுடைய யோக்கியதைக்கு மிதமிஞ்சினதாக இருக்கிறது. நான் இருக்கப் போகும் சிறைச்சாலைக்குப் பக்கத்தில் வெகுதூரம் வரையில் வீடுகளே இல்லை. நீ இருப்பதானால், தெற்கு அலங்கத்திலே தான் ஏதாவது ஒரு வீட்டில் இருக்க வேண்டும். அவ்விடத்திலும் நீ மாத்திரம் தனியாக இருந்தால், நீ எதைத்தான் கவனிக்க முடியும்? உனக்கு அந்தந்த சமயத்துக்குத் தகுந்தபடி யோசனை சொல்ல யாராவது பெரியவர்களான ஆண்பிள்ளைகள் இருக்க வேண்டும். அதுவுமன்றி, வேலைக்காரர்களும் பலர் இருக்க வேண்டும். புதிதாகப் போகும் இடத்திலுள்ள மனிதர்களுக்கு உன்னுடைய யோக்கியதையும் மேம்பாடும் தெரியாது