பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i86 பூர்ணசந்திரோதயம்-3 - விட்டு வந்த அந்த மனுஷி இந்தப் பாளையக்காரரிடத்தில் மாத்திரம் வித்தியாசமாக நடந்திருப்பாள் என்று நாம் எப்படி நினைக்கிறது. இவர் சொல்லுகிறபடியே காரியம் நிறைவேறி னாலும் நிறைவேறியிருக்கலாம். அவள் எப்படியும் கெட்டுப் போனவள்தானே. அவளுக்கு நிர்ணயம் என்ன?’ என்றார். இனாம்தார், 'அப்படியானால் அவள் உங்களையும் என்னையும் மாத்திரம் வெறுத்து விலக்கவேண்டிய காரணம் என்ன? அவளுடைய ஆசையெல்லாம் பணத்தைப் பொருத்த தாக இருந்தால், பாளையக்காரரைவிட நீங்கள் எவ்வளவோ அதிகமாகப் பணம் கொடுப்பீர்களே; அப்படியின்றி, அவள் அழகைக் கண்டு ஆசைப்படுகிறவளாக இருந்தாலும், அப்போதும் நீங்கள் இந்தப் பாளையக்காரருக்குத் தோற்கக் கூடியவர்கள் அல்லவே' என்றார். அந்தச் சமயத்தில் இளவரசர் உள்ளே வந்து சேர்ந்தார். அதை உணர்ந்த பாளையக்காரர் மருங்காபுரி ஜெமீந்தாரை விட்டு ஓடோடியும் வந்து மகிழ்ச்சியோடு புன்னகை செய்து, நிரம்பவும் வணக்கமாகவும் மரியாதையாகவும் இளவரசரை வரவேற்று உன்னதமான ஓர் ஆசனத்தில் அமரச் செய்ய இளவரசர் பாளையக்காரர்மீது கொண்டிருந்த அருவருப்பையும் ஆத்திரத்தையும் வெளியில் காட்டாமல் மறைத்து சந்தோஷமும் புன்னகையும் தோற்றுவித்தவராய் அப்பாளையக்காரரது யோக rேமங்களைப் பற்றி விசாரித்தார். ஆனால், அவர்கள் பூரண சந்திரோதயத்தைப் பற்றி பேச்சையே எடுக்காமல் இருந்தனர். அதற்குள் மருங்காபுரிக் கிழவரும் இனாம்தாரும், மிட்டாதாரும் நெருங்கி வந்து இளவரசரை வணங்கி மரியாதை செய்தனர். உடனே இளவரசர் ஜெமீந்தாரை நோக்கி, "ஜெமீந்தார் ஐயா! நம்முடைய ராஜாங்க சம்பந்தமான சிலமுக்கிய சங்கதிகளைப் பற்றி உங்களிடம் பேசவேண்டும் என்று இன்று காலை முதல் எண்ணியிருந்தேன். நாம் இருவரும் கொஞ்ச நேரம் தனியாகப் போய் ப் பேசுவோம். இவர்கள் எல்லோரும்