பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் . 167 இவ்விடத்தில் சந்தோஷமாகப் பேசிக்கொண்டிருப்பதை நாம் கெடுக்கக் கூடாது' என்றார். அதைக் கேட்ட பாளையக்காரர், 'தாங்கள் எல்லா இடத்திலும் எஜமானர் . ஆகையால், தங்களுடைய வாக்குக்கு எதிர் வாக்கு ஏது. தாங்கள் இவ்விடத்திலேயே இருந்து பெரியவரோடு பேசலாம்.நானும் நம்முடைய மிட்டாதாரும், இனாம் தாரும் கொஞ்சம் தூரத்திலிருந்து பேசுகிறோம் என்று கூறியவண்ணம் மற்ற இருவரையும் அழைத்துக்கொண்டு சிறிதுதுரத்திற்கு அப்பால் போய் உட்கார்ந்துகொண்டார். ஜெமீந்தாரோடு தனிமையில் இருந்த இளவரசர் தணிவான குரலில் பேசத் தொடங்கி, 'இது என்ன கூத்தாக இருக்கிறதே! இந்தப் பாளையக்காரருக்கு ஏதாவது பைத்தியம் பிடித்தி ருக்குமா?’ என்றார். ஜெமீந்தார், 'நாம் இப்போது எதையும் நிச்சயமாகச் சொல்ல முடியாது. இவர் துணிந்து இவ்வளவு தூரம் காரியங்களைச் செய்திருப்பதைப் பார்த்தால் இவர் அவளை வசப்படுத்தி இருப்பார் என்று எண்ணவேண்டியிருக்கிறது. அப்படி நடந்திருக்கும் என்றே நான் நினைக்கிறேன். ஏனென்றால், அன்றையதினம் பூர்ணசந்திரோதயம் என்னுடைய ஜாகைக்கு வந்தபோது, அவள் ஒரு சங்கதி சொன்னாள். அவளைக் குறித்து நாம் இப்படிப் பந்தயம் ஏற்படுத்தியிருக்கிறோம் என்ற சகலமான ரகசியங்களையும் அவள் இந்தப் பாளையக்காரரி டத்திலிருந்து தெரிந்து கொண்டுவிட்டதாகச் சொன்னாள். அதிலிருந்து என் மனம் ஒருவிதமாகச் சந்தேகம் கொள்கிறது” என்றார். இளவரசர், 'ஆம் ஆம். அவள் என்னிடத்தில் கூட அதே சங்கதியைத் தெரிவித்தாள். ஆனால், அவள் இந்தப் பாளையக்காரரைப் பற்றி நிரம்பவும் அருவருப்பாகவும் இழிவாகவும் பேசினாள் என்றார்.