170 பூர்ணசந்திரோதயம்-3 தோன்றி அங்கிருந்த எல்லோரோடும் சந்தோஷமாகப் பேசலானான். இரண்டொரு நிமிஷ நேரத்திற்குப் பிறகு அவர்கள் அறுவரும் விருந்து உண்ண உட்கார்ந்து கொண்டனர். அன்றைய தினம் தயாரிக்கப்பட்டிருந்த விருந்து நிகரற்றதாகவும் எவ்விதக் குற்றம் குறைகளுக்கும் இடமின்றி மகா மாதுரியமாகவும் இருந்தது. அதற்குமுன் அவர்களுக்கு மருங்காபுரி ஜெமீந்தார் நடத்தி வைத்த விருந்தைவிடப் பதின்மடங்கு இது சிரேஷ்டமாக இருந்தது என்றே சொல்ல வேண்டும். ஓயாமல் விருந்துண்டு பழகிய மனிதரான இளவரசர் கூட அன்றைய விருந்தை உண்பதில் நிரம்பவும் ஆனந்தமும் சந்தோஷமும் அடைந்த வராகக் காணப்பட்டார். போஜனம் நடந்தபோது பூர்ணசந்திரோதயத்தைப் பற்றிய விஷயமே குறிக்கப்படவில்லை. அவர்கள் உலக விஷயத்தைப் பற்றி விளையாட்டாகவும் வேடிக்கையாகவும் சம்பாஷித்த வண்ணம் விருந்துண்டு எழுந்தனர். - எழுந்து கைகளைச்சுத்தம்செய்துகொண்ட பின்னர் அவர்கள் அறுவரும் மேன்மாடத்தில் இருந்த ஒரு சிங்கார மண்டபத்தை அடைந்து, ஆசனங்களில் உட்கார்ந்து கொண்டனர். உடனே எல்லோருக்கும், சந்தனம், தாம்பூலம், புஷ்பம் முதலியவை வழங்கப்பட அவர்கள் அவற்றை அணிந்து கொண்டு குதூகலமாக வார்த்தையாடிய வண்ணமிருந்தனர். அப்போது அந்த வீட்டு வாசலில் இன்னொரு வண்டி வந்து நின்றது. அதற்குள் வந்தது யார் என்பதை அறிய ஆவல் கொண்ட சாமண்ணாராவ், உடனே எழுந்து வண்டியண்டை போய்ப் பார்த்தான். அதன் முன்பக்கத்திலிருந்து பஞ்சண்ணா ராவும், ராமனும் உடனே கீழே குதித்தார்கள். வண்டிக்குள் ளிருந்து ஒரு ஸ்திரீ கீழே இறங்கினாள். அவள் தனது உடம்பை எல்லாம் போர்வையால் மூடிக்கொண்டிருந்தாள். ஆனாலும்,
பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/174
தோற்றம்