பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 169 ஜெமீந்தார், நானும் அப்படியேதான் எண்ணுகிறேன்' என்றார். இளவரசர், 'அதிருக்கட்டும்; சல்லாய்ப் பட்டு அணிந்து வந்து என் மதியை மயக்கிவிட்டுப் போன பார்சீ ஜாதிப் பெண்ணைப் பற்றி ஏதாவது தகவல் கிடைத்ததா?" என்றார். அதைக்கேட்ட ஜெமீந்தாரினது முகம் சட்டென்று மாறுதல் அடைந்தது. ஆனாலும், அவர் அப்புறம் இப் புறம் திரும்பிக் கனைத்து ஒருவாறு தமது சங்கடத்தை மறைத்துக் கொண்டு, 'அவளைப் பற்றி ஒரு சங்கதியும் தெரியவில்லை. தெரிந்திருந்தால், அதைத் தங்களுக்குத் தெரிவிக்காமல் நான் இதுவரையில் சும்மா இருந்திருப்பேனா? ஏதாவது செய்தி கிடைத்தால், அதே கூடிணத்தில் உங்களுக்குத் தகவல் கொடுக்கிறேன். அதிருக்கட்டும். நம்முடைய சாமளராவ் ஏன் இன்னமும் வரவில்லை. அவன் இந்த விருந்துக்கு வருவானோ மாட்டானோ தெரியவில்லையே' என்றார். இளவரசர், 'பாளையக்காரரைக் கேட்டுப் பாரும். இவர் அவனுக்குக் கடிதம் அனுப்பினாரோ இல்லையோ தெரிய வில்லை' என்றார். உடன்ே ஜெமீந்தார்பாளையக்காரரிருந்த பக்கமாகத் திரும்பி, 'என்ன பாளையக்காரரே! நம்முடைய சாமளராவுக்கும் நீங்கள் கடிதம் எழுதினர்கள் அல்லவா? அவன் இன்னமும் வரவில்லையே! அவன் வருவானா வரமாட்டானா? நாம் அவனுக்காகக் காக்க வேண்டுமா? மேல் ஆக வேண்டிய காரியத்தை ஆரம்பிக்கலாமா?' என்றார். உடனே பாளையக்காரர், நான் அவனுக்கும் கடிதம் அனுப்பி இருக்கிறேன். வந்துவிடுவான். எல்லாவற்றிற்கும் இன்னம்கால் நாழிகை நேரம் பொறுத்துப் பார்ப்போம்" என்று சொல்லி வாய் மூடு முன், சாமளராவும் அங்கே வந்து சேர்ந்தான். அவன் ஒரு விஷயத்தையும் அறியாத விளையாட்டுப்பிள்ளையைப் போலத்