பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கள் 175 உடனே ஜெமீந்தார் மேலும் பேசத்தொடங்கி, 'நான் முக்கியமான விஷயத்தைப் பற்றி விசாரிக்கத் தொடங்குமுன் நம்முடைய சாமளராவிடம் ஒரு விஷயம் கேட்க விரும்பு கிறேன். என்ன சாமளராவ்! நீ இப்போது அந்தப் பூர்ண சந்திரோதயத்தினிடம் ஏதோ அந்தரங்கக் காரியதரிசி உத்தியோகம் பெற்றுக்கொண்டிருப்பதாக ஒரு வதந்தி எனக்கு எட்டியிருக்கிறது. ஆகையால், நாம் மேலே விசாரணை நடத்துவதில், உனக்கு ஏதாவது ஆட்சேபணை இருந்தால் நீ அதை இப்போதே சொல்லிவிடலாம்" என்றார். சாமளராவ், 'நீங்கள் சொல்லுகிறபடி நாம் உத்தியோகம் பெற்றது உண்மைதான். ஆனாலும், நம்முடைய ஒப்பந்தப்படி நாம் செய்யவேண்டிய மிகுதியுள்ள கடமைகளைச் செய்யா விட்டால் மற்றவர்கள் சும்மா விடுவார்களா? ஆகையால், நான் இந்த விஷயத்தில் ஆட்சேபணை செய்வது நியாயமாகுமா? ஆனால், நான் ஒரு விஷயம் மாத்திரம் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். என்னுடைய எஜமானியினிடத்தில் நான் நெருங்கிப் பழகியதில், அவர்கள் தக்க பெரிய இடத்து ஸ்திரீயாகவும் சகலவிதத்திலும் மரியாதை பட்டவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதை நான் தெரிந்து கொண்டதன்றி, அவர்களுடைய யோக்கியதையை நாம் உள்ளபடி அறியாமல், இப்படிப்பட்ட பந்தயம் ஏற்படுத்தியது கொஞ்சமும் தகாத காரியம் என்றும் நான் எண்ணிக் கொண்டிருக்கிறேன். ஆனால் அவரவர்கள் நேரில் கண்டு உள் விஷயத்தைத் தெரிந்து கொண்டால்தான் நம்பிக்கை உண்டாகுமேயன்றி, நான் சொல்வதைக் கேட்பதனால், உங்களுடைய பழைய அபிப்பிராயம் உடனே மாறிப் போகும் என்று நான் நினைப்பது சரியல்ல. ஆகையால், இந்த விசாரணை நடக்கட்டும். ஆனால், என்னுடைய எஜமானியம் மாளின் மேல் அக்கிரமமான பகைமையும் குரோதமும் கொண்டு பொய்யான அவதூறுகளை யாரும் சொல்லி, அவர்களை நிந்திப்பதற்கு மாத்திரம் 2: س {i.5. وفي