பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 பூர்ணசந்திரோதயம்-3 என்னவோ. அதனாலேதான் ஜெயம் இவர்கள் இருவருக்கும் கிடைக்காமல் எனக்குக் கிடைத்தது என்று நான் எண்ணுகிறேன். மற்ற எல்லோரையும் விட நான் அவ்வளவு சிரேஷ்டமான வனோ, அல்லவோ, அதை நான் சொல்ல முடியாது. சிலருக்குக் குருட்டு அதிர்ஷ்டம் என்று ஒன்று உண்டாவது வழக்கம். அப்படிப் பட்ட அதிர்ஷ்டத்தினாலேயே நான் அந்தப் பெண்ணை என் வசப்படுத்தினேன் என்று சொல்வதைப் பற்றி யாரும் ஆட்சேபிக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். எவருக்கும் கிடைக்க மாட்டாத அந்தப் பெண்ணரசியை நான் வசப்படுத்தியதும் உண்மை. அவள் சுவர்க்க போகத்துக்குச் சமமான நிகரற்ற பேரானந்த சுகத்தில் என்னை ஆழ்த்தியதும் உண்மை. இங்கே இருக்கும் முப்பதினாயிரம் ரூபாய்க்கு நான் உரியவனானதும் உண்மை' என்று நிதானமாகக் கூறிவிட்டு உட்கார்ந்து கொண்டார். அதைக் கேட்டவுடனே சாமளராவினது முகம் மாறுபட்டது. அடக்க இயலாக்கோபத்தினால் அவனது மனம் கொதிக்க உடம்பு பதறியது. அதுபோலவே இளவரசரது நிலைமையும் மாறுபட்டது. ஆனாலும், அவர் அதை வெளியில் காட்டாமல் அடக்கிக்கொண்டார். உடனே சாமளராவ் எழுந்து, 'இன்னம் மிச்சம் இருக்கும் பெயர்களையும் கடைசிவரையில் கூப்பிட்டு எல்லோருடைய வாக்குமூலங்களையும் கேட்டுவிடுங்கள். அதன்பிறகு சன்மானம் கொடுக்கலாம். ஏனென்றால், இன்னம் யாராவது ஜெயம் பெற்றிருந்தால், சன்மானத் தொகையை இரண்டு கூறாகப் பங்கு போட்டுக் கொடுப்பதே நியாயம் அல்லவா?' என்றான். சபாநாயகர், 'அதுவும் வாஸ்தவந்தான். அப்படியானால், நம் முடைய இளவரசர் பேசவேண்டும்' என்றார். உடனே இளவரசர் எழுந்துநின்று, 'இந்த விசாரணையில் கலந்துகொள்வது என்மனசுக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை. ஆனாலும் நாம் ஒருதரம் செய்துகொண்ட ஒப்பந்தத்தை