பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 179 மரியாதைப்படுத்த நாம் கடமைப்பட்டிருப்பதைக் கருதி நான் இப்போது எழுந்து பேசுகிறேன். நான் இந்தத் தேசத்திலுள்ள எல்லோரிலும் சிரேஷ்டமானவன். செல்வமும், செல்வாக்கும், மேம்பாடும் உடைய இளவரசன். அப்படியிருந்தாலும், இந்த விஷயத்தில் தோல்வியடைந்து விட்டதை மறைத்து வீண் பெருமை பாராட்டிக் கொள்ள எனக்கு இஷ்டமில்லை. ஸ்திரீகளுடைய பிரியம் இன்னார் மேல்தான் ஏற்படும் என்று யாரும் நிர்ணயித்துச் சொல்லமுடியாது. அது ஒர் ஒழுங்குக்குக் கட்டுப்பட்டதல்ல. நம்முடைய பாளையக்காரர் சொல்வதுபோல, அவள் அவரிடம் காதல் கொள்ளவும் கொள்ளலாம். ஆனால், எனக்கு அப்படிப்பட்ட பாக்கியம் கிடைக்கவில்லை' என்று கூறிவிட்டு உட்கார்ந்து கொண்டார். அவ்வாறு இளவரசர் சொன்ன வரலாறு மிட்டாதாரையும் இனாம் தாரையும் மட்டிலடங்கா ஆச்சரியத்தில் ஆழ்த்தி விட்டது. இளவரசர் சொன்னது உண்மையாக இருக்கும் என்றே அவர்கள் இருவரும் நம்பினார்கள். பூர்ணசந்திரோதயம் இளவரசரினது அரண்மனைக்குப் போன தைத் தான் கண்டதாகப் பஞ்சண்ணாராவ் தங்கள் இருவரிடத்திலும் சொன்னது பொய்யாக இருக்க வேண்டும் என்று அவர்கள் இருவரும் தீர்மானித்துக் கொண்டவர்களாய் மிகுந்த வியப்போடு தத்தம் ஆசனங்களில் சாய்ந்து கொண்டனர். அதன்பிறகு சபாநாயகர், "சரி, அடுத்தாற்போல் என்னுடைய முறையல்லவா. யெளவனப் புருஷர்களான இளவரசர், மிட்டாதார், இனாம்தார் முதலியோர் கையை விரிக்கையில், குடுகுடு கிழவனான நான் எந்த மூலை. இந்தப் பந்தயத்தில் பூர்ணசந்திரோதயத்தின்மூலமாக எனக்குக் கொஞ்சமும் இன்பம் உண்டாகாவிட்டாலும் அவளை வென்ற புண்ணிய புருஷருக்கு இந்தச் சன்மானத் தொகையைக் கொடுப்பதாகிய இன்பம் ஒன்றைத்தான் நான் எதிர்பார்க்கிறேன். என்னுடைய சங்கதியை இவ்வளவோடு நிறுத்தி நம்முடைய சாமளராவ், அவனுடைய