வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 19 i மனசைப் புண்படுத்துவது மரியாதையல்ல" என்று கூற, உடனே இளவரசர், "ஆம். ஆம். வாஸ்தவந்தான்' என்று கூறி ஆமோதித்தார். அந்தச்சமயத்தில் மெத்தைப்படியின் வழியாக யாரோசிலர் தடதடவென்று ஏறிவந்த ஓசை உண்டாகவே, அங்கிருந்த எல்லோரது கவனமும் அந்த ஒசையில் சென்று லயித்துப் போனது. எல்லோரும் வாசற் படியைப் பார்த்தவண்ணம் இருக்க, அடுத்த நிமிஷத்தில் ஹேமாபாயி முன்னும் ராமன் பின்னுமாக அங்கே வந்து சேர்ந்தனர். அவர்களைக் கண்டவுடனே பாளையக்காரர்பெருத்த வேங்கைப்புலி சிங்கம் முதலிய கொடிய காட்டு விலங்குகளைக் கண்டுகிலி கொள்பவர் போலப் பெருந் திகில் கொண்டு ஸ்தம்பித்து அப்படியே நாற்காலியில் சாய்ந்துவிட்டார். தமது ஏற்பாடு முழுதும் தலைகீழாக மாறிக்கெட்டுப் போனதையும், தாம் எவ்விதத் திலும் வாயைத் திறக்க மாட்டாமல் பூர்ணசந்திரோதயம் செய்து விட்டதையும் கண்டு அளவற்ற வெட்கமும், துக்கமும், அவமானமும் அடைந்தவராய்த் தாம் அன்றையதினம் செய்துள்ள ஏற்பாடுகளைப் பூர்ணசந்திரோதயம் எப்படியோ தெரிந்து கொண்டு வெகு சுலபத்தில் தன்னை வென்று விட்டாளே என்ற பிரமிப்பும் கலக்கமும் அடைந்தவராய்க் கோழைத்தனத்தினால் முற்றிலும் மேற்கொள்ளப்பட்டவராய்க் குன்றிப்போய் உட்கார்ந்து விட்டார். ஹேமாபாயியோ அவ்விடத்தில் கூடியிருந்த மகா சிரேஷ்டமான அத்தனை மனிதர்களையும் பார்க்க நடுநடுங்கிப் போய் ஸ்தம்பித்து நின்று விடடாள். அந்தச் சமயத்தில் ராமன் பஞ்சண்ணாராவின் காதண்டை போய்த் தணிவான குரலில், 'நான் ஒரு போலீஸ் ஜெவானை அழைத்துக்கொண்டு போய் வைத்துக்கொண்டு பயமுறுத்தாதிருந்தால், ஹேமாபாயி வந்தே இருக்கமாட்டாள்" என்றான். அடுத்த நிமிஷத்தில் ஹேமாபாயி சபாநாயகரான தனது முக்கிய போஷகரை நோக்கி, go.é.H-13
பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/195
தோற்றம்