பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 பூர்ணசந்திரோதயம்-3 உங்களோடு வருவது அவர்களை அவமரியாதைப் படுத்தியது போல் ஆகும். அதுவுமன்றி, இந்த விருந்துக்காக, நான் பலரிடத்திலுமிருந்து தங்கத்தட்டுகள், வெள்ளித் தட்டுகள், பேலாக்கள், இலைகள் முதலிய விலை உயர்ந்த சாமான்களை எல்லாம் இரவல் வாங்கிக்கொண்டு வந்திருக்கிறேன். அன்னிய ருடைய சொத்துக்களை எல்லாம் நீங்கள் எடுத்துக்கொண்டு போவதற்குச் சட்டம் இடம்கொடுக்காது. ஆகையால், நீங்கள் நாளையதினம் காலையில் வந்தால், அதற்குள் நான் எங்கேயாவது பணம் சேகரித்துக் கொடுத்து விடுகிறேன். வேறுவித சிரமம் இல்லாமல் நீங்கள் பணத்தை வாங்கிக் கொண்டு போகலாம். அதுவும் அல்லாமல், இது ராத்திரிக் காலம். இப்போது ஜெப்தி செய்வதும், கைது செய்வதும் சட்ட விரோதம். ஆகையால், நீங்கள் போய் விட்டு நாளைக்கு வாருங்கள்' என்றார். அதைக்கேட்ட அமீனா, “இந்த வாரண்டு பிறந்து ஒரு மாத காலமாகிறது. பகலில் நீர்கண்ணில் படாமல் ஒளிந்து கொண்டே இருந்து வருகிறீர். ஆகையால், நியாயாதிபதி ராத்திரியில் உம்மைப் பிடிப்பதற்கு உத்தரவு கொடுத்திருக்கிறார். அந்த உத்தரவு இதோ இருக்கிறது பாரும். அதுநிற்க, இப்போது இந்த வீட்டிலுள்ள சொத்துக்களையெல்லாம் எங்கள் கடமைப்படி நாங்கள் ஜெப்தி செய்தே தீரவேண்டும். இந்தச் சொத்துக்களில் அன்னியருடைய சொத்து ஏதாவது இருக்குமானால், அவர்கள் நியாயாதிபதியினிடம் போய் அந்தச் சொத்து தங்களுடையது என்று ருஜூப்படுத்தினால், உடனே அது அவர்களுக்குக் கொடுக்கப்பட்டுப் போகும். அதைப்பற்றி நீ கவலைப்பட வேண்டியதில்லை. உம்மைக் கைது செய்வதிலும் இன்னொரு விஷயம் இருக்கிறது. இப்போது நாங்கள் ஜெப்தி செய்யப் போகும் சொத்துக்களில் எதெது அன்னியரிடம் இரவல் வாங்கப்பட்டதோ அவைபோக, மிகுதியிருக்கும் சொத்துக் களின் பெறுமானம் முப்பதினாயிரத்துக்கு மேலே இருக்கு மானால், நாங்கள் உம்மைக் கைது செய்யப் போகிறதில்லை. சொத்துக்களே எங்களுக்கு போதுமானவை” என்றான்.