பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே.துரைசாமி ஐயங்கார் 2O7 வேண்டும் என்பதை மறந்துவிட்டீர்களா? நீங்கள் இவ்வளவு ஒத்திரத்தில் என் விஷயத்தில் குரோதம் பாராட்டத் தொடங்கினால், நம்முடைய எண்ணம் கடைசிவரையில் எப்படி நிறைவேறும்? என்னை நீங்கள் கடைசிவரையில் கைவிடுகிற தில்லை என்ற நிச்சயம் ஏற்படாவிட்டால் நான் இவ்வளவு பாடுபட்டு உங்களைத் தப்ப வைப்பதில் என்ன நன்மை யிருக்கிறது?’ என்றாள். - & கலியாணசுந்தரம் முன்னிலும் அதிகமாகக் குழம்பித் இகைத்து, "என்ன ஆச்சரியம் இது வந்த ஆரம்பத்தில் நீ புத்திசாலித்தனமாகவும் விவேகத்தோடும் பெருந்தன்மை யோடும் பேசினாய். இப்போது அறியாத குழந்தை பேசுவது போலத்தாறுமாறாகவும் அற்பத்தனமாகவும் பேசுகிறாய்? நான் உன்னைக் கடைசிவரையில் கைவிடுகிறதில்லை என்கிற நிச்சயம் ஏற்பட வேண்டும் என்கிறாயே. அதன்கருத்து இன்னது என்பது எனக்குக் கொஞ்சமும் விளங்கவில்லை. அதைக் கொஞ்சம் தெளிவாகச் சொல்” என்றான். அப்போதும் அவனைப் பிடித்த பிடியை விடாமல் இருந்த அந்தப் பெண் நிரம்பவும் உருக்கமாகவும், வாத்சல்யமாகவும், கொஞ்சலாகவும், தணிவான குரலில் பேசத் தொடங்கி, "நான் என்னுடைய கருத்தை எவ்வளவு வெளிப்படையாகச் சொல்ல முடியுமோ அவ்வளவும் சொல்லிவிட்டேன். இதைக்காட்டிலும் இன்னமும் அதிகமாக வெளியிட என் மனம் கூககிறது. மற்ற எல்லோரையும்விட அதிமேதாவியாக இருக்கும் நீங்கள் இந்த அற்ப சங்கதியைத் தெரிந்துகொள்ளவில்லை என்றால், இதை யார்தான் நம்புவார்கள்? உண்மையில் தூங்குகிறவர்களை எழுப்பலாம்; தூங்குவதாகப் பாசாங்கு பண்ணுகிறவர்களை எழுப்ப முடியாது என்று ஜனங்கள் சொல்லுவார்கள். அதுபோல நீங்கள் செய்கிறீர்கள் போலிருக்கிறது. நான் முகமூடியால் என் முகத்தை மறைத்துக்கொண்டிருப்பதற்குக் காரணம் இன்னது என்று நான்சொன்னது உங்களுக்கு நினைவிருக்கலாம். இந்த go.6.HH-44