பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2O6 பூர்ணசந்திரோதயம்-3 இந்திராபாயி, 'ஏன் இப்படி நீங்கள் என்னை வெறுக்கிறீர்கள்? உங்கள் விஷயத்தில் நான் எள்ளளவும் தவறாக நடந்துகொள்ளவே இல்லையே. நீங்கள் என் விஷயத்தில் அபாரமான மன இரக்கம் கொண்டு இவ்வளவு நேரம் என்னிடத்தில் வித்தியாசமாவது அருவருப்பாவது காட்டாமல், என்னைக் கட்டிப்பிடித்துக் கொண்டிருந்தீர்கள். இப்போது திடீரென்று என் விஷயத்தில் ஏதோ சந்தேகம் கொண்டு, என்னை தூரத் தள்ள எத்தனிக்கிறீர்களே. நீங்கள் எனக்குச் செய்த உபகாரத்தை முழுதும் செய்ய வேண்டாமா? இதுவரையில் என்னைக்கட்டிப் பிடித்துக் கொண்டிருந்த தைப்போல நீங்கள் என்னை இன்னும் கொஞ்சநேரம் கட்டிக் கொண்டிருப்பதால் உங்களுக்கு என்னகெடுதல் உண்டாகிவிட்ப் போகிறது? இது வரையில் என்னைப் பிடித்தது மாத்திரம் குற்றமில்லை. இன்னம் கொஞ்சநேரம் பிடிப்பதினால் மாத்திரம் குற்றம் உண்டாகிவிடப் போகிறதா? அப்படி உங்கள்மேல் குற்றம் சுமத்துவது யார்? நான்தானே குற்றம் சுமத்தவேண்டும்? நீங்கள் எதற்கும் இளகாத மகா பரிசுத்தமான மனசு உடையவர்கள் என்று நான்தான் உங்களுக்கு ஏற்கெனவே புகழ்ச்சிப் பத்திரம் கொடுத்துவிட்டேனே. அப்படி இருக்க, நீங்கள் யாருக்காக அஞ்சுகிறீர்கள். எனக்கு உதவி செய்ய முன் வந்தவர்கள், என் மனமும் உடம்பும் சரியான நிலைமைக்கு வருகிற வரையில் அந்த உதவியைச் செய்துவிடுங்கள். அதுவுமன்றி நான் இன்னொரு முக்கியமான கேள்வி கேட்கிறேன். அதற்கு மறுமொழி சொல்லவேண்டும். இந்த இடத்தைவிட்டுத் தப்பித்துப்போக வேண்டும் என்கிற ஆசை உங்களுக்கு உண்டா இல்லையா?' என்றாள். கலியாணசுந்தரம், “ஏன் அந்தக் கேள்வியை இந்தச்சமயத்தில் கேட்கிறாய்? இந்த அக்கிரமச் சிறையிலிருந்து தப்பிப்போக யார்தான் ஆசைப்படமாட்டார்கள்?' என்றான். இந்திராபாயி, "நீங்கள் இவ்விடத்திலிருந்து தப்பிப் போவதற்கு என்னுடைய உதவியும் துணையும் அவசியம்