பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 205 இருக்கும் இடத்தில் வந்து அவரைப் பிடித்து இறுகக்கட்டிக் கொண்டு பேசுகையில், அவளது முகம் எப்படி இருக்கிறது என்பதை அறியவும், வேறு பலவிதமாகவும் அந்தப் புருஷர் ஆசைகொள்ளாமல் இருக்கிறார் என்றால், அந்தக் கட்டுக் கதையை யாராவது உண்மை என்று நம்புவார்களா? அப்படி நீங்கள் சொல்வது உண்மையாக இருந்தால், சகல ஆசைகளுக்கும் விகாரங்களுக்கும் விலக்கான ஜிதேந்திரியனாக நீங்கள் இருக்க வேண்டும்; அல்லது உங்களுடைய மனம் இளகாத பாறையினாலாவது, மரக்கட்டையினாலாவது செய்யப் பட்டதாகத்தான் இருக்க வேண்டும். என்னை ஏன் இப்படிப் பிடித்துப் பிடித்துத் தள்ளுகிறீர்கள். நான் உங்களுடைய உடம்பைப் பிடித்துக்கொண்டிருப்பதில், உங்களுக்கு ஏதாவது நஷ்டம் உண்டா? அல்லது கஷ்டந்தான் உண்டா? எதுவுமில்லை. ஆனால், அதனால் எனக்கு உண்டாகும் லாபமும் நன்மையும் ஆனந்தமும் அபரிமிதமானவையாக இருக்கின்றன. நீங்கள்தான் என் விஷயத்தில் எப்படிப்பட்ட துர்மோகமும் கொள்ளாத உலகைத்துறந்த முனிஸ்வரராயிற்றே! நான் உங்களைக் கட்டிக் கொண்டிருப்பதைப் பற்றி உங்களுக்கு ஏன் இவ்வளவு கவலை?” என்று குழந்தை கொஞ்சுவதுபோல இனிமையான குரலில் கூறினாள். அவளது அபூர்வமான சொற்களைக் கேட்டு முற்றிலும் திக் பிரமை கொண்டு ஸ்தம்பித்துப் போனகலியாணசுந்தரம், "என்ன ஆச்சரியம் இது: இந்திராபாயீ நீ இதுவரையில் நடந்து கொண்டதும், பேசியதும் ஒரு மாதிரியாக இருந்தன. இப்போது பேசுவதும், நடந்து கொள்வதும் வேறுமாதிரியாக இருக்கின்றன. தயவு செய்து முதலில் நீ என்னைவிட்டு நகர்ந்துகொள். அதற்குமேல், உன்னுடைய உண்மையான கருத்து இன்னது என்பதை நான் தெரிந்து கொள்ளுகிறேன். நான் எப்பேர்ப்பட்ட குணமுடைய மனிதன் என்பதை நீயும் தெரிந்துகொள்ளலாம்' என்று கூறிய வண்ணம், முன்னிலும் அதிக பலமாக அவளைத் தூர நகர்த்த எத்தனித்தான்.