பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264 பூர்ணசந்திரோதயம்-3 கலியாணசுந்தரத்தைப் பற்றிய சங்கதியல்ல; வேறொருவரைப் பற்றியது. அதை மாத்திரம் நீங்கள் இப்போது தெரிந்து கொண்டால், கலியாணசுந்தரம் செய்யும் காரியத்தின் கருத்து இன்னதென்பது பகிஷ்காரமாகத் தெரிந்து போகும். அதாவது, சில தினங்களுக்கு முன் இந்த ஊரிலுள்ள ஒரு தாசிப் பெண் சிறைச்சாலையில் அடைபட்டதாக எனக்கு அறிக்கை வந்திருந்தது. அவள் நிரம்பவும் அழகானவளாம். வயது சுமார் பதினைந்து இருக்குமாம். அவள் ஒரு குற்றம் செய்து விட்டாள். இந்த ஊர் அரண்மனையிலுள்ள ராஜாத்தியின் நகையை ஒரு வேலைக்காரி திருடிக் கொண்டுபோய் இந்தத் தாசிப் பெண்ணினிடத்தில் விற்றுவிட்டாள். அந்த நகை சுமார் இரண்டாயிரம் ரூபாய் பெறும். அதை இவள் பத்து ரூபாய்க்கு வாங்கிவிட்டாள். அந்தச்சங்கதி போலீஸ் இன்ஸ்பெக்டருக்குத் தெரிந்து போய்விட்டது. அவர் உடனே போய் இந்தத் தாசிப் பெண்ணைப் பிடித்துச் சிறைச்சாலையில் அடைத்து வைத்திருக்கிறார். அந்த வழக்கின் விசாரணை இன்னம் சில தினங்களில் நடக்கப்போகிறது. அந்தப் பெண் தாசி வகுப்பைச் சேர்ந்தவளாக இருந்தாலும், நல்ல யோக்கியமான நடத்தை யுடைய பெண், கெட்டநடவடிக்கைக்கே போகிறவ ளல்ல; சிறு பெண்ணாகையால் அறியாத்தனத்தினால் நகையை வாங்கி விட்டாள். அந்தப் பெண்ணை இன்ஸ் பெக்டர் இந்தக் கலியாணசுந்தரம் அடைபட்டிருந்த அறைக்குப் பக்கத்து அறையில் அடைத்து வைத்திருந்தாராம். அவள் தன்னுடைய அறைக்குப் பக்கத்திலிருக்கும் அறையில் அடைபட்டிருக்கிறாள் என்பதையும், அவள் நல்ல சுந்தரமான பெண் என்பதையும் இந்தக் கலியாணசுந்தரம், அறை பெருக்கும் வேலைக்காரியினி டத்தில் எப்படியோ கேட்டுத் தெரிந்து கொண்டார் போல் இருக்கிறது. அதுவுமன்றி, இவர் அந்த வேலைக்காரியையும் கைவசப்படுத்திக் கொண்டு மகா அருமையான ஒருகாரியம் செய்திருக்கிறார். அது என்ன காரியம் என்பதை இந்தப் பெண்ணே நேரில் வந்து பார்க்கட்டும்' என்று கூறினார்.