பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 283 அதைக் கேட்ட அந்த ஸ்திரீ விரைவாக நடந்து உள்ளே நுழைந்து சிறிது தூரத்திற்கு அப்பால் இருந்த தாழ்வாரத்தை அடைந்து, அவ்விடத்திலிருந்து மேலே ஏறி படிகட்டின் வழியாக மேன் மாடத்திற்குச் சென்று வெல்வெட்டு மாடத்தின் வாசற்படிக்குப் போய்ச் சேர்ந்தாள். அதன் வாசற்கதவு மூடி வைக்கப்பட்டிருந்தது ஆகையால், அவள் தனது கையைக் கதவின் மீது மெதுவாக வைக்க, கதவு உடனே திறந்து கொண்டது. அந்த ஸ்திரீ, உட்புறத்தில் தனது திருஷ்டியைச் செலுத்த மருங்காபுரிக் கிழவர் பாராக்காரன் சொன்னபடி ஒரு புஸ்தகத்தைக் கையில் வைத்துப் படித்துக் கொண்டிருந்தது தெரிந்தது. அதைக்கண்ட அந்த ஸ்திரீகதவை நன்றாகத் திறந்து கொண்டு மெதுவாக நுழைந்த வண்ணம், 'சுவாரஸ்யமாக எதையோ படிக்கும் சமயம் போலிருக்கிறது? அதற்கு இடைஞ்சலாக நான் வருகிறேன்' என்று மாதுரியமான குரலில் நயமாகக் கூறினாள். அவளது குரலைக் கேட்டு திடுக்கிட்டு நிமிர்ந்து வாசல் பக்கத்தை நோக்கிய மருங்காபுரி ஜெமீந்தார் மகிழ்ச்சியும் புன்னகையும் அரும்பின முகத்தினராய், "ஹா! அம்மணி பாயீ வா வா; உன்னுடைய வருகையைத்தான் நான் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறேன். இன்றைய தினம் நிலவரி வசூல் விஷயமாக நான் வெளியூருக்குப் போக வேண்டும் என்று எதிர்பார்த்துக் கொண்டு, வீட்டை விட்டு வெளியில் போகாமல் இங்கேயே இருக்கிறேன். பொழுதுபோவது கடினமாக இருந்தது. அதற்காக எதையோ ஒரு புஸ்தகத்தை எடுத்துப் பார்த்துக் கொண்டி ருக்கிறேன், வேறொன்றும் இல்லை. இந்தப் புஸ்தகம் படிப்பதில் என்ன சுவாரஸ்யமிருக்கிறது. உன் கடிதத்தில் நீ எழுதியுள்ள சங்கதியைப் படித்தது முதல் என் மனம் முழுதும் குழம்பிப் போய்ப் பைத்தியம் கொண்டதுபோல இருக்கிறது. இந்தப் புஸ்தகத்தைப் படிப்பதும் சரி, வேறு எதுவும் சரி; எனக்குச் சங்கடமாக இருக்கின்றன. நீ எப்போது வருவாய்,