பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 293 போகிறோமோ? அது ஒருநாளும் இல்லை. அதைப் பற்றி நீ கொஞ்சமும் யோசனை செய்யவேண்டியதே இல்லை” என்றார். அதன்பிறகு அம்மணிபாயியும் மருங்காபுரி ஜெமீந்தாரும் மேலும் அரைநாழிகை சாவகாசம் பற்பல விஷயங்களையும் பற்றி சம்பாஷித்திருந்து, ஷண்முகவடிவைத் தாங்கள் எப்படி ஏமாற்றுகிறது என்ற விவரங்களையெல்லாம் முடிவு செய்து கொண்டனர். உடனே அம்மணிபாயி கிழவரிடம் செலவு பெற்றுக்கொண்டு அவ்விடத்தை விட்டுப்புறப்பட்டு வெளியில் சென்று ராஜபாட்டையில் நின்று கொண்டிருந்த தனது வண்டியில் ஏறி உட்கார்ந்துகொண்டு வேறு பற்பல தெருக்களின் வழியாக வண்டியை விடச் செய்து, தனது சிநேகிதைகளான சில ஸ்திரீகளினது வீடுகளில் சிறிது நேரம் இருந்து பொழுதைப் போக்கிவிட்டு மாலை நேரத்தில் தனது கிரகத்திற்குப் போய்ச் சேர்ந்தாள். தனது அக்காளினது யோக rேமங்களைக் கேட்கவும்; அவளைத் தான் எப்போது பார்க்கக் கிடைக்கும் என்ற சந்தோஷச் செய்தியை அறியவும் அளவற்ற அவாக் கொண்டு, அம்மணி பாயினது வருகையை மட்டற்ற ஆவலோடு எதிர்பார்த்திருந்த ஷண்முகவடிவு, அம்மணிபாயி புன்னகை பூத்த முகத்தோடு திரும்பி வந்ததைக் கண்டு, அவள் சந்தோஷ சங்கதி கொண்டுவந்திருக்கிறாள் என்று யூகித்துக் கொண்டு, 'ஏன் அம்மா! என் அக்காளைப் பார்த்தீர்களா? அவள் செளக்கியமாக இருக்கிறாளா? என்னை அவளிடம் அழைத்து வரச்சொன்னாளா?' என்று ஆசையோடு வினவ, அதைக்கேட்ட அம்மணிபாயி, "நான் இங்கே இருந்து புறப்பட்டு நேராக சோமசுந்தரம் பிள்ளையினுடைய மாளிகைக்குப் போனேன். அவ்விடத்தில் இப்போது சோமசுந்தரம் பிள்ளையும், அவருடைய தங்கையும் தான் இருக்கிறார்கள். அவருடைய சம்சாரமும் உன்னுடைய அக்காளும் வீட்டில் இல்லை. இந்த ஊருக்குக் கிழக்கில் நாலு மைல் தூரத்தில் மாரியம்மன்கோவில் என்று ஒரு பிரபலமான ஊர் இருக்கிறது. அந்த ஊரில் அம்மன்