பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304 பூர்ணசந்திரோதயம்-3 அவளைத் தான் எப்போது பார்க்கக் கிடைக்குமோ என்ற ஏக்கமும் ஏமாற்றமும் தோன்றி அவளது மனதைக் கப்பிக் கொண்டன. இருந்தாலும் எப்படியும் தனது அக்காள்அன்றைய இரவிற்குள்திரும்பிவந்துவிடுவாள் என்ற ஒர் எண்ணம் தோன்றி மனதைத் திடப்படுத்திக் கொண்டிருந்தது. அவர்களை அனுப்பிவிட்டு வாசற் கதவண்டை சென்ற மருங்காபுரி ஜெமீந்தார் நிலைப்படியின் மீது நின்றுகொண்டு கீழே பார்த்தபடி, "கண்ணம்மா கண்ணம்மா!' என்று இரண்டு மூன்றுதரம் அழைக்க, கீழே இருந்து ஒரு பெண்குரல், "இதோ வந்துவிட்டேன் அண்ணா!' என்று மாதுரியமாக மறுமொழி கூறியது. பிறகு யாரோ தடதடவென்று மெத்தைப் படிகளின் வழியாக மேலே ஏறிவந்த ஓசை உண்டாயிற்று. அடுத்த நிமிஷத்தில் லீலாவதி ஜெமீந்தாரிருந்த இடத்திற்கு வந்து சேர்ந்த்ாள்.இவ்விடத்தில் நாம் ஒரு முக்கியமான விஷயத்தை விளக்குவது அவசியமாகத் தோன்றுகிறது. அன்றையதினம் பிற் பகலில் மருங்காபுரி ஜெமீந்தாரும் அம் மணி பாயியும் சந்தித்து ஷண்முகவடிவை வஞ்சித்து அவளைத் துராகிருதமாக அடையவேண்டுமென்று தீர்மானித்த காலத்தில், அம்மணி பாயியின் பெயரை லக்ஷ சமியம்மாள் என்றும் லீலாவதியைக் கண்ணம்மாள் என்றும் தாங்கள் மாற்றி அழைக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டனர். ஏனென்றால், ஒரு வேளை ஷண்முகவடிவு தங்களிடத்திலிருந்து .יו தப்பிப்போக நேருமானால், தாங்கள் இன்னார் என்பதை அவள் தெரிந்து கொள்ளாமலேயே போவது நல்லது என்பது அவர்களது கருத்து. கோலாப்பூரிலிருந்த காலத்திலேயே அம்மணிபாயி தன் பெயர் லr-மியம்மாள் என்றே ஷண்முகவடிவினிடத்தில் சொல்லி இருந்தாள். ஆகையால், அந்தப் பெயரைச்சொல்லியே தன்னை அழைக்கும்படி அவள் ஜெமீந்தாரிடம் சொல்லி வைத்தி ருந்தாள். அந்த ஏற்பாடுகளுக்கு இணங்கவே, ஜெமீந்தார் லீலாவதியைக் கண்ணம்மாள் என்று அழைக்க, அவள் முன்