பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 305 கூறப்பட்டபடி அவரிடம் வந்து சேர்ந்தாள். பிற்பகலில் அம்மணிபாயி அவ்விடத்தைவிட்டுப் போனபிறகு ஜெமீந்தார் லீலாவதியை அழைத்து ஷண்முகவடிவின் விஷயத்தில்தாங்கள் செய்ய உத்தேசித்திருக்கும் சதியாலோசனையின் விவரத்தை எல்லாம் வெளியிட்டு அதற்கு அவளும் உதவியாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அவளது மனம் அந்த அக்கிரமத்தைச் செய்ய இணங்கவில்லை. ஆனாலும், அவ்வளவு பெரிய மனிதரான தனது பெரிய தகப்பனார் சொல்வதைத் தடுத்துப் பேசமாட்டாதவளாய், அவள் அவரது பிரியப்படி நடந்துகொள்வதாக ஒப்புக் கொண்டிருந்தாள். ஆகவே, லீலாவதி ஜெமீந்தார் நின்ற இடத்துக்கு வந்து உள்ளே இருந்த இருவரது காதிலும் படும்படியான குரலில் பேசத் தொடங்கி, 'என்ன அண்ணா? ஷண்முகவடிவு வந்துவிட்டாளா? லக்ஷாமியம்மாளும் வந்திருக்கிறார்களா?" என்று ஆசையோடும் ஆவலோடும் வினவ, ஜெமீந்தார் அவள் பேசியதைப் போலவே குதூகலமாகவும் மகிழ்ச்சியோடும் பேசத் தொடங்கி, 'ஆம்; இரண்டு பேரும் இப்போதுதான் வந்தார்கள். வந்தவர்களை உபசரிக்க யாரும் பெண் பிள்ளைகள் இல்லை. ஆகையால், உன்னை அவசரமாகக் கூப்பிட்டேன்; வா, அவர்களிடம் போகலாம்' என்ற கூறியவண்ணம் அவளையும் அழைத்துக் கொண்டு ஷண்முகவடிவும் அம்மணியாயியும் உட்கார்ந்திருந்த இடத்தை நோக்கிச் சென்று,அதற்கு மூன்று நான்கு கெஜ தூரத்துக்கு இப்பால் மறைவாக நின்று கொள்ள, லீலாவதி அவர்கள் இருவரும் இருந்த இடத்துக்குப் போய் மகிழ்ச்சியும் சந்தோஷமும் ஜ்வலித்த முகத்தோடு ஷண்முக வடிவைப் பார்த்து, 'வாஅம்மா! வாஅம்மா!' என்று அளவற்ற உவகையோடு உபசரித்ததன்றி, அபாரமான வியப் போடு ஜெமீந்தாரைப் பார்த்து, 'அண்ணா ஷண்முகவடிவை நீங்கள் நன்றாகப் பார்த் தீர்களா? கமலத்துக்கும் இவளுக்கும் கொஞ்சங்கூட வித்தியாசமே தெரியவில்லையே இரண்டு பேரும் ஒரே அச்சில் வார்த்தெடுக்கப்பட்ட பதுமைகள்போல