பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

306 பூர்ணசந்திரோதயம்-3 ஒரேமாதிரியாக இருக்கிறார்கள் பார்த்தீர்களா இரண்டுபேரும் ஒரிடத்தில் ஒன்றாக இருந்தால், அக்காள், தங்கை என்ற பேதமே கொஞ்சமும் தெரியாதுபோலிருக்கிறதே என்று மகிழ்ச்சியே வடிவாகக் கூறினாள். அதைக் கேட்ட கிழவர், 'ஆம்; அம்மா வாஸ்தவந்தான். சற்றுமுன் இவர்கள் வந்தபோது நான் இந்தக் குழந்தையைப் பார்த்துவிட்டு கமலம்தான் மாரியம்மன் கோவிலிலிருந்து திரும்பி வந்துவிட்டாளோ என்று நினைத்தேன். ஆனால், லக்ஷாமியம்மாளும் கூட வந்ததிலிருந்து இவள் கமலமல்ல என்று நிச்சயித்துக் கொண்டேன். இவள் கமலத்தைப் போலவே இருப்பதைக் கண்டு அந்த ஆனந்தத்தை அடக்கமுடியாமல் உன்னையும் கூப்பிட்டேன். நீயும் வந்து பார்த்தால் நிரம்பவும் சந்தோஷமடைவாயென்று எண்ணித்தான் உன்னை உடனே கூப்பிட்டேன்' என்றார். அவ்வாறு அவர்கள் இருவரும் தன்னைப்பற்றி நிரம்பவும் புகழ்ச்சியாகவும், மகிழ்ச்சியாகவும் பேசிக் கொண்டதைக் கேட்டு மிகுந்த கிலேசமடைந்து குனிந்து தத்தளித்தவண்ணம் ஷண்முக வடிவு லீலாவதியைக் கடைக்கண்ணால் பார்க்க, அவள் சுமார் இருபது வயதிற்கு மேற்படாத வயதுடைய வளாகவும் நிகரற்ற கட்டழகும் வசீகரத் தோற்றமும் வாய்ந்து அப்ஸ்ர ஸ்திரீ போலவும் இருக்கக் கண்டு அடக்கவொண்ணா வியப்பும் பிரமிப்பும் அடைந்தவளாய் அம்மணிபாயினது முகத்தை நோக்க, அந்தக் குறிப்பை அறிந்த அம்மணிபாயி, 'ஷண்முகவடிவு! இது யார் தெரியுமா உனக்கு ? இந்த அம்மாள்தான் ஐயாவுடைய தங்கை. இந்த அம்மாளுடைய பெயர்தான் கண்ணம்மாள் என்பது' என்று எல்லோரும் கேட்கும்படியாகக் கூறினாள். உடனே லீலாவதி நிரம்பவும் வாத்சல்யத்தோடு ஷண்முகவடிவைப்பார்த்தவண்ணம் நடந்து வந்து அவளுக்குப் பக்கத்தில் ஸோபாவின் மீது உட்கார்ந்து கொண்டு அம்மணிபாயியைப் பார்த்து, "சாப்பாட்டுக்கு